LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜி.எஸ்.எல்.வி. எப்15; ஜனவரி 29ல் விண்ணில் பாய்கிறது

Share

இஸ்ரோ சார்பில் ஜி.எஸ்.எல்.வி., -எப்15 ராக்கெட், ஜன.29ம் தேதி மாலை 6:23 மணிக்கு, ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

     ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஜனவரி 29ம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்த ராக்கெட், ஜி.பி.எஸ்., சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.,01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஜனவரி 28) காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ஜி.எஸ்.எல்.வி., எப்15 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.