LOADING

Type to search

சினிமா

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சவதீகா பாடல் வெளியீடு

Share

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி.” இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலும் முன்னோட்டமும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ முன்னோட்டத்தின் பி.டி.எஸ். காணொளியை படக்குழு நேற்று வெளியிட்டது. இதில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைக்குழு வழங்கியுள்ளதை பதாகை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.