LOADING

Type to search

உலக அரசியல்

ஆப்பிரிக்க நாட்டில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று

Share

ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் இந்த ஆண்டு எபோலா தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர் ஆவார். இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.