LOADING

Type to search

சினிமா

அஜித் சாருக்கு பாராட்டு விழா நடத்த யோகி பாபு வேண்டுகோள்

Share

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி.” இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முன் பதிவு சில திரையரங்கிள் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் டிக்கெட்டுகளை வேகமாக புக் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடலும் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ முன்னோட்டத்தின் பி.டி.எஸ். காணொளியை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த யோகி பாபு ” அஜித் சார் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். பத்ம பூஷன் விருது என்பது சாதாரண விஷயம் அல்ல. நாம் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். நாம் அனைவரும் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். அந்த விழாவில் அவரை பற்றி பெருமையாக பேச வேண்டும்” என வேண்டுக்கோள் விடுத்தார்.