LOADING

Type to search

சினிமா

இந்திய அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது

Share

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 67-வது கிராமி விருது விழாவில் இந்திய அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டன் விருது வென்றுள்ளார்.

இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது ஆகும். கடந்த 1951ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. மொத்தம் 94 பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான பாடகி சந்திரிகா டாண்டன், தனது ‘திரிவேணி’ இசை ஆல்பத்திற்காக ‘சிறந்த தற்கால ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார். சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த விழாவில் “நாட் லைக் அஸ்” என்ற பாடல் மற்றும் 5 பிரிவுகளின் கீழ் விருது வென்று அசத்தியுள்ளது. அதாவது சிறந்த ராப், சிறந்த ராப் பெர்பாமன்ஸ், சிறந்த மியூசிக் வீடியோ, சிறந்த ரெக்கார்டிங் , இந்த ஆண்டின் சிறந்த பாடல் என 5 கிராமி விருதுகளை குவித்துள்ளது.