LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த சீனா

Share

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு ஆகியவை சர்வதேச வர்த்தக போரை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரியும் விதித்தார். அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. வரி விதிப்பை எதிர்கொண்ட நாடுகள், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றத் தொடங்கின. டிரம்பின் வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை மட்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் டிரம்ப். அதாவது, புலம்பெயர்ந்தோர் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்கா சற்று  வாங்கியிருக்கிறது.

ஆனால், சீனா மீதான வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போதுள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது.