யாழ்ப்பாணம். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற இரத்ததான முகாம்!
Share
பு.கஜிந்தன்
மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று 04-02-2025 செவ்வாய்க்கிழமையன்று
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ.இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சரயன்கள், உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி தாரணி, பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், தாதியர்கள் சுகாதார ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.