பாகிஸ்தான் காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
Share

பதற்றமான வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக்கில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலை ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு காவல்துறைக்கு பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அதிகாரிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத குழுவும் பெறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இந்த சம்பவத்திற்கு எதிராக தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.