கிளிநொச்சியில் அமைக்க திட்டமிட்டுள்ள காற்றாலை மின்சக்தி திட்டம் தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு கலந்துரையாடல்!
Share

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி (வேரவில்) பகுதியில் 204 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 6ம் திகதி வியாழன் அன்றையதினம் நடைபெற்றது.
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் T.M.J.W. Bandara தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர்களான Mr. P. Dilakshan, Mr. Chatura Wanniaracchi, மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் இராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரி, உதவிப்பணிப்பாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.