LOADING

Type to search

சினிமா

எப்போதுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது – சசிகுமார்

Share

மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நடிகர் சசிகுமார் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ருசிகரமாக பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: கல்லூரிக்கு பக்கத்து ஊரு தான் எனது வீடு. அடிக்கடி இந்த வழியாகத்தான் செல்வேன். இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கின்றது இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. மேடையில் பேச வேண்டும் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும், அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

என்னை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை இழுத்து வந்துள்ளார்கள். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, அதற்காகத் தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை செய்யுங்கள் என்று நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன், நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்போம். நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன்.

குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தா கூட சொல்லக் கூடாது. நான் நடித்த அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசும். மொழி, மதம், ஜாதிகளை கடந்து நமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவக் கூடாது, தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம். மனிதம் நமக்குள்ளே என்றும் இருக்க வேண்டும். அடுத்த படம் மதுரையில் தான் இயக்க உள்ளேன். காதலா நட்பா என்று பார்த்தால் எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.