LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை ஊடகவியலாளர் இ. பாரதியின் மறைவுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள . இந்திய துணை தூதரகம் இரங்கல்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தின் மூத்த தமிழ் பத்திரிகையாளர் திரு. இராசநாயகம் பாரதி அவர்கள் மறைவுக்கு யாழ். இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண. இந்திய தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் பத்திரிகைத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திரு. பாரதி, தினக்குரல்
ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய ஆசிரியராகவும் சேவையாற்றியவர். அவரது பத்திரிகை பணிகளில் வெளிப்பட்ட நேர்மை, பொறுப்புணர்வு, மற்றும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பு என்றும் மகத்தான பாராட்டுக்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.