LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

Share

9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்றையதினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.