LOADING

Type to search

இந்திய அரசியல்

பெண்களுக்கு வீட்டிலிருந்தே பணி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு திட்டம்

Share

பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த, அவர்களுக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார்.

      இது குறித்து சந்திரபாபு நாயுடு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த புதிய திட்டம் உதவிகரமாக இருக்கும். அதாவது, பெண்கள் வீட்டிலிருந்தே ஐடி துறையில் வேலை செய்வதற்கு புதிய ஐடி கொள்கையை செயல் படுத்த உள்ளோம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அவர்களின் சொந்த ஊர்களில் இருந்து பணிபுரிய ஒவ்வொரு மாநகரம், நகரம் மற்றும் மண்டலத்தில் கிராமப்புறங்களில் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் அலுவலகங்கள் அமைக்க ஐ.டி., நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்படும். ஆந்திராவின் இந்த முன்முயற்சி பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். ஆந்திராவின் ஐடி மற்றும் ஜிசிசி கொள்கை 4.0 அந்த திசையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.