LOADING

Type to search

இலங்கை அரசியல்

கட்டைக்காட்டில் மரதன் ஓட்ட நிகழ்வு

Share

யாழ்ப்பாணம். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு 14ம் திகதி அன்று (14.02.2025) காலை மரதன் ஓட்ட நிகழ்வு காலை 6.00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு பாடசாலையில் நிறைவு பெற்றதோடு, காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு பாடசாலையில் நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.