LOADING

Type to search

இலங்கை அரசியல்

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மென்ஸ் கொலேஜின் பரிசளிப்பு விழா-2024

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(14-02-2025)

மன்னார் நகர் பகுதியை மையப்படுத்தி இயங்கி வரும் சிறுவர்களுக்கான கல்வி நிறுவனமான “மென்ஸ் கொலேஜ்” நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வானது மன்னார் நகரசபை மண்டபத்தில் மென்ஸ் காலேஜ் நிறுவனத்தின் முகாமையாளர் நஜீலா பானு முஹீத் தலைமையில் 13-02-2025 வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆங்கில புலமையை அதிகரிக்கும் விதமாக வருட வருடம் இடம் பெறும் “spell bee challenge” போட்டியின் கடந்த வருடத்திற்கான போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு குறித்த கெளரவம் வழங்கப்பட்டது.

” 2024 spell bee challenge” போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் புள்ளிகள் அடிப்படையில் சான்றிதழ்கள் ,கிண்ணங்கள், வழங்கி கெளரவிக்கப் பட்டனர்.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் சட்டத்தரணி எச்.ஹலீம் தீன்,கௌரவ விருந்தினராக மன்னார் வலயக் வலயக் கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் எம்.ஆர்.பிரின்ஸ் டயஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக காக்கையன்குளம் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.எம்.அஸ்வர்,தலைமன்னார் பியர் ம.வி பாடசாலையின் அதிபர் எஸ்.எச்.எம்.சிகார் ஆகியோர் கலந்துகொண்டதோடு பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் 2024 spell bee challeng போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய 120 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.