மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு பாதிப்பு என்கிறார் வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்!
Share

மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீன் பிடி சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்றபோது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.