யாழ்ப்பாணத்தில் கல்சியத் தண்ணீரை குடித்த முடியவர் உயிரிழப்பு!
Share

யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ) 15ம் திகதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி 15ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.