LOADING

Type to search

சினிமா

‘சுழல் 2’ வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Share

நடிகர் கதிர் ‘மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜய்யுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கதிருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாம் பாகம் கிரைம் திரில்லர் கதையாக தயாராகி உள்ளது. இதற்கான திரைக்கதையை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி எழுதியுள்ளனர். இந்த 2-ம் பாகத்தை பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இணைந்து இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர் வரும் 28-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.