LOADING

Type to search

இந்திய அரசியல்

‘அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல’ – ராகுல் காந்தி

Share

அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது அதானி விவகாரம் குறித்து பேசப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது தனிப்பட்ட விவகாரம். சர்வதேச தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதில்லை” என்று பிரதமர் மோடி கூறினார். இந்நிலையில், ‘அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல’ என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது தொகுதிக்கு உட்பட்ட லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது; “அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல. அது தேசிய விவகாரம்.

அமெரிக்காவில் அதானி மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், நாங்கள் அதைப் பற்றி விவாதிப்பதில்லை என்றும் பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியாவின் பிரதமராக இருப்பவர், இந்த விஷயத்தைப் பற்றி டிரம்ப்பிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தேவைப்பட்டால் அதானியை அமெரிக்காவிற்கு விசாரணைக்கு அனுப்புவதாக கூறியிருக்க வேண்டும். ஆனால் இது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறியுள்ளார்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.