பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘என்.டி. ஆர்-31’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Share

கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதைதொடர்ந்து, ‘என்.டி. ஆர்-31’ படம் கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.