LOADING

Type to search

உலக அரசியல்

வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு

Share

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. அந்நாட்டின் லா லிபரேட்டட் மாகாணத்தில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 78 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.