LOADING

Type to search

உலக அரசியல்

ஜெர்மனி பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் சிஎஸ்யு வெற்றி

Share

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ளது. ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தோல்வியடைந்திருப்பதை முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சியால் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. ஜெர்மனியில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.