LOADING

Type to search

இந்திய அரசியல்

மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Share

ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் மூதாட்டி ஒருவர் ஸ்டாலின் புகைப்படத்தின் மீது மண்ணை அள்ளி வீசுவார். அதிலும் கொடுமை என்னவென்றால் அந்த பாட்டியை தேட காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

எம்ஜிஆர் மாளிகையின் தூண் கூட ஓபிஎஸ்-ஐ துரோகி என சொல்லும். திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக அவர் செயல்படுகிறார். திமுகவை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்சின் எண்ணமாக உள்ளது. அதிமுக மூலமாக வளர்ந்த ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதது பெரிய வருத்தமாக உள்ளது.செயல்பாடற்ற அரசாங்கம் (அப்பா) செயலியை மட்டும் தான் உருவாக்க முடியும். தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை ஜாதிய கலாசாரம், ஜாதியை கொடுமைகள் உள்ளிட்டவற்றால் சீரழிந்து கிடக்கிறது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. மும்மொழி கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.தமிழ்நாட்டை கோமாளி அரசாங்கம் ஆண்டு கொண்டு இருக்கிறது. காவல்துறையை ஏவல் துறையாக்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது தான் திமுக அரசின் வேலை. எத்தனை ரெய்டுகள் வந்தாலும் அதிமுக அஞ்சப் போவது கிடையாது.கோவையில் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் பழிவாங்கும் நோக்கத்தில் ரெய்டு நடைபெறுகிறது. யார் அந்த சார் என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை. திமுக அரசுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை. அம்மா மருந்தகம் தமிழ்நாட்டில் சிறப்பாக விளங்கியது. அம்மா மருந்தகத்தில் எல்லோருக்கும் தங்கு தடை இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. அப்படி இருந்த அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் தேவையா?. புதிதாக திட்டம் கொண்டு வராமல் அதிமுகவின் திட்டத்தை காப்பி அடித்து முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார்கள். அதேபோல் அம்மாவின் அட்சய பாத்திர திட்டமான அம்மா உணவகத்தை சிதைத்து சின்னா பின்னம் ஆக்கிவிட்டார்கள். இப்போது தமிழ்நாட்டில் பெயருக்கு மட்டுமே அம்மா உணவகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.