LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

Share

(மன்னார் நிருபர்)

(25-02-2025)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள 32 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் வரும் வெள்ளிக்கிழமை 28ம் திகதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையிலே குறித்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை