மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தை தவிர்த்து கடமையில் கண்ணாக இருந்தனர்
Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(27-02-2025)
வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து 27ம் திகதி வியாழக்கிழமை மதியம் இலங்கை பூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் அன்றைய தினம் (27) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடு படாத நிலையில் தமது கடமையை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்க பட்டுள்ளதாகவும், தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்க பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித் துள்ளதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப் பட்டதாக தெரிவித்து இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியைப் பெற்றுக் கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு, ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் 27ம் திகதி அன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடு படாத நிலையில் தமது கடமையை முன்னெடுத்துள்ளனர்.