LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சிவராத்திரி’ யை ஒட்டிய விசேட வழிபாடுகள் மற்றும் அபிசேகங்கள்

Share

கடந்த 25-02-2025 செவ்வாய்க்கிழமையன்று கனடாவில் பல ஆலயங்களில் நடைபெற்ற ‘சிவராத்திரி’ தொடர்பான விசேட வழிபாடுகள், பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றதை நாம் பல ஊடகங்கள் வாயிலாக கண்டு களித்தோம்.

இந்த வரிசையில் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சிவராத்திரி’ யை ஒட்டிய விசேட வழிபாடுகள் மற்றும் அபிசேகங்கள் ஆகியவை பக்தர்களை ஈர்த்தன.
பக்தர்களுக்கு தெய்வீகம் சார்ந்த உள உற்சாகத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் ஆகியவையும் சிறப்பாக இடம்பெற்றன.

அங்கு இடம் பெற்ற இசை நடன நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவிகள் மற்றும் இசை. நடன ஆசிரியைகளும் ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் கௌரவிக்கப்பெற்றனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் அனைத்து சாமப் பூசைகளிலும் கலந்து கொண்டு சிவராத்திரி தினத்தை பக்தியுடன் அனுஷ்டித்தனர்.