அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் – எடப்பாடி பழனிசாமி
Share

அடுத்த 62 வாரங்களுக்கு தாங்கள் தான் எதிர்க்கட்சி என த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
நாட்டில் ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள்தான். ஆனால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி. இன்றைக்கு எதிர்க்கட்சியாக உள்ளோம். 2026-ல் ஆளுங்கட்சியாக இருப்போம். வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்கும். அ.தி.மு.க. சார்பில் இருவர் கூட்டத்தில் பங்கேற்பர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம் என்றார்.