LOADING

Type to search

இந்திய அரசியல்

சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜா.. நேரில் வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

Share

லண்டனில் வருகிற மார்ச் 8ஆம் தேதி சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் காலைப் பொழுது…

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய வைலன்ட் சிம்பொனி இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.