பிரான்சில் கனமழை, வெள்ளம் – 4 பேர் உயிரிழப்பு
Share

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு குட்டி தீவு ரியூனியன். மடகாஸ்கர் மற்றும் மொரீசியசுக்கு இடையே உள்ள இந்த தீவு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்கு உருவாகி உள்ள புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனை தொடர்ந்து ரியூனியன் தீவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் சாலையில் சென்ற பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.