உக்ரைன் டிரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்திய ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பு
Share

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 111வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உக்ரைன், ரஷியா தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவில் உள்ள 10 மாகாணங்களை குறிவைத்து ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. மாஸ்கோ, பெல்ஹொராட், வொரொனெக்ஸ், ஒரியல், நவ்கொரொட், ரியாசன், கலுஹா உள்பட 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை ரஷிய வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தின. 337 டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில் ஒருசில டிரோன்கள் இலக்குகளை தாக்கின. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.