மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கின்றார்
Share
ஈழ விடுதலைப் போரில் சிங்கள பேரின ஒடுக்குமுறையாளர்களினால் இலக்கக் கணக்கான மக்கள் சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். உயிரிழந்தோர் , உடல் உறுப்புகளை இழந்தோர், உடமைகளை இழந்தோர் எண்ணிடலங்காதவர். உலகம் முழுமையிலும் ஏதிலிகளாய்ச் சென்றோர் இலக்கக் கணக்கானவர்.
ஒடுக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் , போரினால் உயிரிழந்த உற்றார் உறவுகளை நினைவுகூர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பிய முள்ளிவாய்க்கால் நினைவுதூணைக் கயவர்கள் இரவோடிரவாக இடித்துத் தள்ளியது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது.
அடிப்படையான மாந்த உணர்வுகளைக் கூட மதிக்கத் தெரியாத அறக்கேட்டின் உச்சமாய் விளங்கும் பேரின வெறிமையின் வெளிப்பாடாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். உலக அறமன்றமாய் விளங்கும் உலக ஒன்றிய அவையும் பொதுநலை நாடுகளும் இச்செயலைக் கண்டிப்பதுடன், மீண்டும் நினைவுத்தூணைக் கட்டி எழுப்பத் தூண்டுவதுடன் ஈழத்து தமிழ் மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளிக்க வலியுறுத்துமாறும் வேண்டுகின்றோம்.
இக்கண்
இரா. திருமாவளவன்
தலைவர்மலேசியத் தமிழ் நெறிக் கழகம்.