LOADING

Type to search

பொது

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை

Share

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

முருங்கக்காய் மரத்தில் இருக்கும் முருங்கை இலையில் அதிக ஆன்டிஆக்சிடன்டுகள் உள்ளன. நெல்லிக்காயுடன் இதனை சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்பு சத்து உறிஞ்சுவது அதிகப்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள், வாரத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம் என கூறியுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உடல் எடை குறைக்க

முருங்கை இலையில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்தனால், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருகையில் ஒரே மாதத்தில் உங்கள் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளையும் கரைத்து உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

செரிமானம்

வெறும் வயிற்றில் முருங்கை இலைச் சாறு குடித்து வந்தால், நம் உடலின் செரிமான பிரச்சனை ஏற்படாது. இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இரண்டுக்க தினமும் முருங்கை இலை சாறு குடித்து வரலாம்.

கர்ப்பப்பை நீர்க்கட்டி

காலையில் வெறும் வயிற்றில் முருங்கை இலைச் சாற்றை குடித்து வந்தால், கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகள் தேன் கலக்காமல் முருங்கை இலைச் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் சர்க்கரையின் அளவை சீர்படுத்தி நிரந்தரமாக நீரிழிவு நோயிலிருந்து நம்மை மீட்டெடுக்கும்.

தோல் நோய்

வெறும் வயிற்றில் தினமும் முருங்கைச் சாறு குடித்து வந்தால் தோல் நோய் ஏதாவது இருந்தால் அது தானே சரி செய்து கொள்ளும் குணம் முருங்கை இலைக்கு உண்டு.

ஆஸ்துமா

வெறும் வயிற்றில் காலையில் முருங்கை சாறு குடித்து வந்தால் ஆஸ்துமா போன்ற பெரிய நோய்களில் இருந்து விடு படலாம்.

தலை முடி வளர

வெறும் வயிற்றில் தினமும் முருங்கை இலை சாறு குடித்து வந்தால், நம் உடலில் தலை முடி அதிகமாக வளரும். இதனால் தலைமுடி வளர முருங்கை இலை சாறு குடித்து வரவேண்டும்.

வாய்ப்புண் குணமாக

தினமும் வெறும் வயிற்றில் முருங்கை இலை சாறு குடித்து வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும். ரத்த சோகை தினமும் வெறும் வயிற்றில் முருங்கை இலை சாறு குடித்து வந்தால் உடலில் ரத்தசோகை ஏற்படாது.