LOADING

Type to search

கதிரோட்டடம்

தமிழர்களாக இருப்பினும் ஆட்சிக்கு வரும்; அரசாங்கத்தின் நலனைக் கவனிக்கும் கயவர்களாக இருக்கின்றார்களே?

Share

கதிரோட்டம்- 03-12-2021

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தம் ‘விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையப்போகின்றது என்று எமது தமிழ் மக்கள் எண்ணித் தவித்தார்கள். எத்தனையோ நாட்டு இராணுவப் படைகள் வானிலும் தரையிலும் கடலிலும் முகாம்களை அமைத்து மூர்க்கத்தனமான நடத்திய தாக்குதல்களால் மண்ணிலும் விண்ணிலும் அதிர்வுகள் ஏற்பட்டன.

இறுதி யுத்தத்தில் அப்பாவி தமிழ் மக்களும் அறிவு சார்ந்த தமிழ் கல்வியாளர்களும் புத்திஜீவிகளும். தாய்மார்களும். குழந்தைகளும் கொன்றழிக்கப்படவுள்ளார்கள் என்பதை அறியாத எமது மக்கள். தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தவித்துக் கொண்டிருந்தபோது, கொத்துக் கொத்தாக எமது மக்களும் போராளிகளும் அவர் தம் குடும்பத்தினரும் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அன்றிலிருந்து நகர்ந்து சென்ற நாட்கள் நரகமாகமே இருந்தன எமது மக்களுக்கு. முகாம்களில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த முன்னாள் போராளிகளும் மக்களுமாக பட்ட வேதனைகளைக் கண்டு காற்றே கதறியழுததாக இலக்கியப் படைப்புக்கள் காட்சிப்படுத்தியுள்ளன.

மறுபக்கத்தில் ‘காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடித் தேடி ஒவ்வொரு முகாமின் வாசல்களிலும் காலங்களைக் கடத்தியவர்கள் பின்னர் போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்ற போராட்டங்கள் அவர்கள் உறவுகளைப் மீளவும் பெற்றுத் தரத் தவறிவிட்டன. முாறாக போராட்டத்தை நடத்திய சாத்வீகப் போராளிகள் தங்கள் உயிர்களை போராடும் களத்திலேயே இழந்தார்கள்.

மறுபக்கத்தில் தமிழ் மக்களின் துயரத்தையும் அவலங்களையும் இல்லாமற் செய்து அவர்களுக்கு நிம்மதியைத் தேடித் தருவோம் என்று வாக்குறுதிகளை கொடுத்து. வாக்குகளைப் பெற்றவர்கள். ஆட்சி அமைக்கும் தென்னிலங்கைச் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக மாறிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் மக்கள்அனுபவித்த துன்பங்களையும் இழப்புக்களையும் மறந்து, அவர்கள் அதிகார பலத்தையும் பணபலத்தையும் அனுபவிக்கத் தொடங்கினார்கள். அதனால் தமது கடமைகளை மறந்தவர்களாக மாறி தமிழ் மக்களையே உதாசீனம் செய்பவர்களாக காட்சியளித்தார்கள். இந்த காட்சிகள் தான் இப்போதும் தொடர்கின்றன என்பதே உண்மை என்பது நிதர்சனமாகத் தெரிகின்றுத.

ஆனால் 2009க்குப் பின்னர் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னர் பல உண்மைகளை எமது மக்கள் அறிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழ்த் அரசியல்வாதிதகள் என்று சொல்லப்படும் சம்பந்தர், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன் போன்றவர்கள் உட்பட பல தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் அடிவருடிகளாகவே மாறிய வண்ணம் தங்கள் நலன்களை மட்டுமே கவனித்து வருகின்றார்கள்.

அவர்கள் தமிழர்களாக இருப்பினும் ஆட்சிக்கு வரும்; அரசாங்கத்தின் நலனைக் கவனிக்கும் கயவர்களாகவே செயற்படுகின்றார்கள் என்பது நன்கு தெளிவாகின்றது.

இது இவ்வாறிருக்க, தற்போதைய வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஒரு தமிழர். ஆனாலும் அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித்தராமல் ஒரு இராணுவ அதிகாரி போன்று செயற்படுகின்றாரா என்ற கேள்வி தற்போது வட மாகாண மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மாதகலில் காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கடந்த புதன்கிழமை காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோசங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது. போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும், இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனாலும் நாம் முன்னர் குறிப்பிட்ட  தமிழ் அரசியல்வாதிகள் சுமந்திரன் போன்றவர்கள் அந்த இடங்களுக்கு அருகே கூடச் செல்லவில்லை. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்களோடு அருகில் இருந்த எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் தங்கள் சுகத்தை அனுபவிப்பதே தொன்னூறு வீதமான தமிழ் அரசியல்வாதிகளின் நாளாந்த செயற்பாடாக உள்ளது என்பது மிகவும் உண்மையானது.