LOADING

Type to search

பொது

ஜீவன் முக்தி. கேள்வி பதில் | 1௦ வருடமாகத்‌ தியானம்‌ செய்கிறேன்‌…

Share

15 பத்து வருடமாகத்‌ தொடர்ந்து தியானம்‌ செய்கிறேன்‌. எனக்கு இன்னும்‌
முக்தி சித்திக்கவில்லை ஏன்‌? – பெரியசாமி விழுப்புரம்‌

பெரியசாமி ஐயா … 

முதல்‌ விஷயம்‌ தியானம்‌ என்ற பெயரில்‌ நீங்கள்‌ செய்தது தியானமா இல்லை சாதாரண உடற்பயிற்சியா என்பதைக்‌ கண்டுபிடிக்க வேண்டும்‌. இரண்டாவது வெறும்‌ தியானம்‌ மாத்திரம்‌ முக்தி தராது. தியானம்‌ சக்தி தரும்‌. தியானமும்‌ வாழ்க்கை ஞானமும்‌ சேர சேரத்தான்‌ முக்தி சித்திக்கும்‌.

வாழ்க்கைப்‌ பற்றிய ஞானம்‌ என்பது வாழ்க்கையையும்‌ உங்களையும்‌ முழுமையாகப்‌ புரிந்துகொள்வது. சக்தியும்‌ புரிந்துகொள்வதும்‌ சேர்ந்து நடைபெற்றுக்‌ கொண்டே இருக்க
வேண்டும்‌. பத்து வருடமாகத்‌ தியானம்‌ மாத்திரமே செய்தால்‌ உடலில்‌ கொஞ்சம்‌ சக்தி அதிகமாகும்‌. தொடர்ந்து ஞானப்‌ புத்தகங்கள்‌ மாத்திரம்‌ படித்தால்‌ வெறும்‌றிவு அதிகமாகும்‌.

ஞானக்‌ கருத்துகளும்‌ தியான சக்தியும்‌ சம விகிதத்தில்‌ ஒன்று சேரும்‌ போது மட்டுமே அறிவு அனுபவமாக அனுபூதி நோக்கி அழைத்துச்‌ செல்லப்படுவீர்கள்‌. முக்தி சித்திக்கும்‌.
நீங்கள்‌ செய்யும்‌ தியானம்‌ என்பது தியானம்தானா இல்லை தியானம்‌ என்ற பெயரில்‌ வேறு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா என்ற தெளிவுக்கு வாருங்கள்‌. குழப்பம்‌ தீரும்‌.
இரண்டாவது வாழும்‌ ஞானி ஒருவரிடம்‌ நேரடி தீக்ஷையும்‌ ஞான உபதேசமும்‌பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌. பலனடைய ஆரம்பிப்பீர்கள்‌.

“மேடைப்‌ பேச்சு” நினைத்தாலே பயமாயிருக்கிறது…

16. மேடைப்பேச்சை பற்றி நினைத்தாலே கைகால்கள்‌ நடுங்குகின்றன. மீறி செயல்பட முயற்சித்தால்‌ தொண்டை கட்டிக்கொள்ளுகிறது. நா வறண்டுவிடுகிறது. தியானத்தால்‌ சரி செய்ய முடியுமா?    – யாதவ்‌ பெங்களுர்‌

சரி செய்ய முடியும்‌. இதை (fear of perfection) எனக்‌ குறிப்பிடுவார்கள்‌. எதைச்‌ செய்தாலும்‌ துல்லியமாகச்‌ செய்தாகவேண்டும்‌என்ற எண்ணம்‌ இருக்கும்‌ வரை எப்போதுமே எதையுமே கற்றக்கொள்ள முடியாது. எந்தத்‌ துறையைச்‌ சேர்ந்த வல்லுநராக இருந்தாலும்‌ சரி அவர்‌ வல்லுநராகும்‌ முன்‌ பல தோல்விகளைச்‌ சந்தித்திருப்பார்‌. அசிங்கமாகவும்‌ தவறுதலாகவும்‌ முடிந்த தோல்விகளில்‌ இருந்து கற்றுக்கொண்டவர்களே நிபுணர்களாகிறார்கள்‌.

முதல்‌ முறையே நிபுணராக வேண்டும்‌ என நினைப்பவர்கள்‌ தோல்விகளைக் கூட சந்திக்காத துரதிர்ஷ்டசாலிகள்‌. தோல்விகளைச்‌ சந்திப்பது ஒருவகையில்‌ அதிர்ஷ்டமே. கைகால்‌ நடுக்கத்தையும் வாய்‌ குளறுதலையும்‌ பற்றித்‌ தயங்காதீர்கள்‌. அவற்றைச்‌ சந்தியுங்கள்‌. தோல்விகள்‌ வந்தாலும்‌ அவை அதிர்ஷ்டங்களே. தொடர்ந்து போராடுங்கள்‌. “மேடைப்‌ பேச்சு” உடல்‌ சம்பந்தப்பட்டதல்ல. அது மனம்‌ சம்பந்தப்பட்டது.

17. இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்‌ ? – புவனேஷ்‌, கோவை

இளைஞர்களுக்கு… சமுதாயத்தில்‌ பெருகிவரும்‌ குற்றங்களின்‌ எண்ணிக்கையையும்‌ பெருகிவரும்‌ தீவிரவாத சம்பவங்களின்‌ எண்ணிக்கையையும்‌ ஆழ்ந்து பார்க்கும்‌ போது இளைஞர்கள்‌ தங்களுடைய வாழ்க்கையைப்‌ பற்றியும்‌ தன்னைச்‌ சுற்றியிருக்கும்‌ சமுதாயத்தைப்‌ பற்றியும்‌ எண்ணிப்பார்த்து ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ள வரவில்லையென்றால்‌ தெளிவையும்‌ பொறுப்புணர்வையும்‌ அவர்களுக்குள்‌ மலரச்‌ செய்யவில்லை என்றால்‌ அவர்களுக்குள்‌ இருக்கும்‌ கட்டுக்கடங்காத சக்தியைக்‌ கட்டவிழ்த்து நெறிபடுத்தவில்லையென்றால்‌ தெளிவாகத்‌ தெரிந்து கொள்ளுங்கள்‌…

30 ஆண்டுகளுக்குப்‌ பிறகு நீங்கள்‌ வீட்டையோ அலுவலகத்தையோ வைத்திருக்கலாம்‌. ஆனால்‌ வீட்டிற்கும்‌ அலுவலகத்திற்கும்‌ இடையே இருக்கும்‌ பாதையில்‌ நிம்மதியாக உங்களால்‌ பயணிக்க முடியாது. இன்றைய அளவில்‌ உயர்தரப்பட்ட மக்கள்‌ மத்தியில்‌ இந்தப்‌ பயமும்‌ பாதுகாப்பின்மையும்‌ வந்து விட்டது.

நாள்‌ ஆக ஆக காலம்‌ செல்லச்‌ செல்ல நாம்‌ பொறுப்பெடுக்காமல்‌ இருந்தோமானால்‌ அந்தப்‌ பயம்‌ அந்த அச்சம்‌ மேல்தர மக்களிடமிருந்து மெதுமெதுவாக ஊடுருவி நடுத்தர மக்களுக்கும்‌ வந்து விடுமானால்‌ உங்களால்‌ நிம்மதியாக வீதியில்‌ உலவக்கூட முடியாது. உங்களால்‌ நிம்மதியாக வாழ்க்கையை வாழ முடியாது. மிகத்‌ தெளிவாகத்‌ தெரிந்து கொள்ளுங்கள்‌. நீங்கள்‌ யாராக இருந்தாலும்‌ சரி நினைக்கின்ற பணத்தையும்‌ புகழையும்‌ அடையலாம்‌. உங்கள்‌ வீடு இருக்கும்‌. அலுவலகம்‌ இருக்கும்‌. ஆனால்‌ வீட்டையும்‌ அலுவலகத்தையும்‌ இணைக்கின்ற சாலையில்‌ நீங்கள்‌ நிம்மதியாகப்‌ பயணிக்க முடியாது என்பதை நீங்கள்‌ தெளிவாகத்‌ தெரிந்து கொள்ளுங்கள்‌.

தயவுசெய்து இந்த வார்த்தைகளை சாதாரண வார்த்தைகள்‌ என்று எடுத்துக்‌ கொள்ளாதீர்கள்‌.
உங்களுக்கு அளிக்கப்படும்‌ எச்சரிக்கை! இதைப்படிக்கும்‌ நீங்கள்‌ முதியவர்களாக இருந்தால்‌… எல்லோர்க்கும்‌ இந்தக்‌ கருத்தும்‌, இந்த வாழ்க்கை முறையும்‌ பொருந்தும்‌, உங்கள்‌ பொறுப்பை உணர்ந்து, உங்களுக்கு அடுத்துவரும்‌. சமுதாயத்திற்கும்‌, தலைமுறைக்கும்‌ கொண்டு செல்வதற்காக உழையுங்கள்‌!

உங்கள்‌ வாழ்க்கையை வீணாக்கிவிட்டதற்காக உங்கள்‌ வாழ்க்கையில்‌ இந்தக்‌ கருத்துகள்‌ இளமையில்‌ கிடைக்காமல்‌ போய்விட்டதற்காகக்‌ கவலைப்பட வேண்டாம்‌. குறைந்த பட்சம்‌ அடுத்த தலைமுறைக்காவது, இவையெல்லாம்‌ கிடைக்கட்டும்‌ என்று உத்வேகத்தோடு எடுத்துச்‌ செல்லுங்கள்‌.

ஒரு அழகான கருத்தைப்‌ படித்தேன்‌. ஒரு புத்தகத்தின்‌ முன்னுரையில்‌ ஒரு அன்பர்‌, ஆசிரியர்‌ எழுதியிருக்கிறார்‌, “நான்‌ எப்படியெல்லாம்‌ வாழக்கூடாதோ, அப்படியெல்லாம்‌ வாழ்ந்திருக்கிறேன்‌. அதனால்‌ இப்படித்தான்‌ வாழ வேண்டும்‌ என்று அறிவுரை சொல்லும்‌ உரிமை எனக்கு மட்டுமே உண்டு,” என்று. நீங்கள்‌ முதியவராக இருந்தாலும்‌. சரி, வாழ்வை தவறால்‌ வாழ்ந்தவராய்‌ இருந்தாலும்‌ சரி வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும்‌ சரி, அடுத்த சமுதாயத்திற்கு, அடுத்த தலைமுறையினருக்கு இந்த வாழ்வியல்‌ கருத்துகள்‌ சென்று சேர்வதற்கு, உங்களால்‌ ஆன எல்லா முயற்சிகளையும்‌ செய்யுங்கள்‌.

நீங்கள்‌ இளைஞர்களாக இருந்தால்‌, உங்களுக்கோர்‌ அற்புதமான வாய்ப்பு. தவறவிடாதீர்கள்‌! ஓராண்டு உங்களுக்குள்‌, உங்கள்‌ வாழ்க்கையைப்‌ பற்றி, உங்கள்‌ மனத்தைப்‌ பற்றி, உங்களுடைய உணர்வுகளைப்‌ பற்றி, ஆழ்ந்த ஒரு ஆராய்ச்சிக்குள்‌ மூழ்குங்கள்‌. ஓராண்டிற்குப்‌ பிறகு உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும்‌, எதை நோக்கிச்‌ செல்வதனால்‌ உங்கள்‌ வாழ்க்கை மலரும்‌ என்கின்ற தெளிவு உங்களுக்குள்‌ பிறக்கும்‌.

அதை அடிப்படையாக வைத்து, உங்களுக்குள்‌ மலரும்‌ தெளிவை அடிப்படையாக வைத்து, நீங்கள்‌ முடிவெடுக்கும்‌ பொழுது, ஒவ்வொரு நாளும்‌ சக்தியிலிருந்து பொங்கி, சக்தியை நோக்கி மலர்வீர்கள்‌.

18. இவ்வளவு உயர்ந்த ஞானத்தை உணர்ந்து வாழ வாய்ப்பிருக்கிறதா ? ஞான வாழ்க்கை எல்லோருக்கும்‌ சாத்தியமானதா? – புவனேஷ்‌, கோவை

ஜாதி, மத, இன பேதமில்லாமல்‌ அனைவருக்கும்‌ வாழ்க்கையைப்‌ பற்றி ஆராய்வதற்காக, தங்களுடைய வாழ்க்கையைப்‌ பற்றி அவர்கள்‌ சுய பரிசோதனை செய்து கொள்ளுவதற்காக, வாழ்க்கையைப்‌ பற்றிய ஆராய்ச்சி செய்து கொள்வதற்காக, ஓராண்டு உணவு, உடை, இருப்பிடத்தோடு இலவசமாக இந்த (LBT என்கின்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது தியானபீடம்)‌.

இது சமூகத்திற்கு நாங்கள்‌ செய்யும்‌ ஒரு மிகப்பெரிய பங்களிப்பாகவும்‌, எங்கருடைய அன்பின்‌ செழிப்பாகவும்‌ நாங்கள்‌ இந்தச்‌ சேவையைக்‌ கருதுகிறோம்‌. மற்ற எல்லாச்‌ சேவையையும்விட நிலையானது, ஞானதானம்‌! மூன்று விதமான தானமுண்டு அன்னதானம்‌, வித்யாதானம்‌, ஞானதானம்‌.

அன்னதானம்‌ என்றால்‌ உணவளித்தல்‌! அன்னதானத்தினால்‌ ஒருவர்‌ மூன்று மணி
நேரத்திற்குத்‌ திருப்தியாக இருப்பார்‌. வித்யாதானம்‌ என்றால்‌ கல்வி கொடுத்தல்‌. இதனால்‌ 30 ஆண்டுகளுக்கு அவர்கள்‌ தங்களுக்குத்‌ தாங்களாகவே சம்பாதித்து வெளியுலக வாழ்க்கைக்குத்‌
தேவையானதையும்‌ சம்பாதித்துக்‌ கொள்வார்கள்‌.

ஞானதானம்‌ என்பது ஜென்ம ஜென்மத்திற்கும்‌ தரப்படும்‌ வாழ்க்கைப்‌ பரிசு. வாழ்வைப்‌ பற்றிய தெளிவைத்‌ தரும்‌ வாழ்க்கைக்‌ கல்வி. உள்ளுலக வாழ்க்கையின்‌ சொத்துகளையும்‌, வெளியுலக வாழ்க்கையின்‌ சொத்துகளையும்‌ குவிக்க இலவசமாக வழங்கப்படுகிறது.
அன்னதானத்தை விடவும்‌, வித்யாதானம்‌ உயர்ந்தது ; வித்யாதானத்தை விடவும்‌ ஞானதானம்‌ உயர்ந்தது.

ஞான தானமாக, இதை ஒரு மிகப்‌ பெரிய சேவையாக, இந்த நிகழ்ச்சியை உங்கள்‌ முன்‌ வைக்கிறேன்‌. இந்த அற்புதமான வாய்ப்பை இளைஞர்கள்‌ முன்‌ வைப்பதன்‌ மூலமாக, இந்தச்‌ சமூகத்திற்கு நம்மால்‌ ஆன மிகப்பெரிய ஒரு சேவையைச்‌ செய்ய முடியும்‌ என்று நாங்கள்‌ மனப்பூர்வமாக நம்புகிறோம்‌.

வாழ்க்கையைப்‌ பற்றிய பொறுப்பை உணர்ந்து கொண்டு வாழ்க்கையின்‌ நோக்கத்தை முழுமையாகத்‌ தங்களுக்குள்‌ உணர்ந்து கொண்டு, தங்களுக்குள்‌ மலர்வதுதான்‌ உலகத்திற்குச்‌ செய்யும்‌ சேவை. “தனக்குள்‌ தான்‌”மலர்வதற்கு, மலர வைக்கும்‌ சூழ்நிலை தேவை, வாழ்க்கை முறை தேவை. அந்த வாய்ப்பை இலவசமாகத்‌ தருவதை எங்களுடைய சேவையாகக்‌
கருதுகிறோம்‌.

அந்த வாய்ப்பை இலவசமாகத்‌ தருவதை எங்களுடைய சேவையாகக்‌ கருதுகிறோம்‌.
உண்மையைச்‌ சொல்ல வேண்டுமானால்‌, ஜீவன்‌ முக்தியை ஒருவர்‌ தம்முள்‌ மலர்த்துவதற்கு இந்த வாய்ப்பே போதுமானது. வேகவேகமாக ஓடும்‌ குழப்பம்‌ மிகுந்த இன்றைய வாழ்வில்‌ சாத்தியமில்லாமல்‌ போன இந்தச்‌ சூழலை, துடிப்பு மிக்க வீர இளஞைர்களுக்காக உருவாக்கித்‌ தருவதை எங்களின்‌ அன்பின்‌ வெளிப்பாடாகச்‌ செய்கிறோம்‌.

எப்படி ஒரு தொழிற்சாலையில்‌ விஞ்ஞான ரீதியாக பொருட்களை உருவாக்குகிறார்களோ, அப்படி ஜீவன்‌ முக்தர்களை உருவாக்கும்‌ ஞானத்‌ தொழிற்சாலையைத்தான்‌ ட81 என்று சொல்கிறோம்‌. உங்களை ஜீவன்‌ முக்தராக்க உங்களுக்கு நீங்கள்தான்‌ நேரடியாய்‌ உதவ முடியும்‌. எங்களால்‌ அன்பு கரங்களைத்தான்‌ நீட்ட முடியும்‌. அதைப்‌ பிடிப்பது நிச்சயம்‌ உங்கள்‌ கையில்தான்‌ இருக்கிறது.

19. காதல்‌ புதிரா? புனிதமா? – கீர்த்தனா, சேலம்‌

காதல்‌ புதிருமல்ல, புனிதமுமல்ல. அது புதியது, புரியாதது. அதனால்‌ புதிராகிறது. புரியாத அந்த உணர்வு உங்களுக்குப்‌ பிடித்துப்போனதால்‌, இப்போது அது புனிதம்‌ எனத்‌ தெரியும்‌. ஆனால்‌, அந்த உணர்வு புதியது. எனவேதான்‌, அது புனிதமாய்த்‌ தெரிந்தாலும்‌ புதிராகத்‌ தெரிகிறது. அவ்வளவே.

20. இந்து தர்மத்தை வேத தர்மத்தை உருவாக்கியவர்‌ என்று யாரும்‌ இல்லையே, காரணம்‌ என்ன? – சாந்தி, உடுமலைபேட்டை

இதே கேள்வியை வேறு ஒரு இடத்தில்‌ என்னிடம்‌ கேட்டபோது… “சனாதன தர்மத்தில்‌ உருவான ஒவ்வொருவரும்‌, ஒரு மதத்தையே உருவாக்குகின்ற அளவுக்கு திறமையானவர்கள்‌. அதனால்‌, ஒரு ஆள்தான்‌ இந்த மதத்தை உருவாக்கினார்‌ என்று என்னால்‌ சொல்ல முடியவில்லை. அதுதான்‌ உண்மை,”; என்று சொன்னோம்‌.

சனாதன தர்மத்திலிருந்து உருவான ஒவ்வொரு ஞானியுமே, ஒவ்வொரு மதத்தை உருவாக்குகின்ற தெளிவையும்‌, ஆழத்தன்மையையும்‌ உடையவர்கள்‌. அந்தளவிற்கு ஞானத்தன்மையோடு வெளிப்பட்டவர்கள்‌. யாரைச்‌ சொல்வது? யாரை விடுவது? உண்மையில்‌ பார்த்தீர்களானால்‌, சனாதன தர்மம்‌ என்பது. பல மதங்களின்‌, பல தர்மங்களின்‌ பல குழுக்களின்‌ ஒரு குழுமம்தான்‌,
நம்முடைய சனாதன தர்மம்‌. இந்து மதம்‌. இந்தியாவின்‌ பலம்‌.

21. இந்தியாவின்‌ பலம்‌ எது? சார்லஸ்‌, பெங்கால்‌

தங்களுக்குள்‌ சத்தியத்தைப்‌ பகிர்ந்து கொள்ளவும்‌, அதன்‌ ஆழத்தைத்‌ தேடுவதற்கும்‌ திறந்த மனத்தோடு இருக்கும்‌ சனாதன தர்மம்தான்‌ இந்தியாவின்‌ பலம்‌ இதுதான்‌ நம்முடைய பாரத கலாச்சாரத்தின்‌ ஆணி வேர்‌. வேறு எந்த மதத்திலும்‌, எந்தத்‌ துறையிலும்‌ இருப்பது போல, பயத்தாலோ ஆசைகாட்டுவதன்‌ மூலமாகவோ வளர்க்கப்படாத தர்மம்‌. சத்தியத்தின்‌ தேடுதல்‌ ஒன்றையே ஆணிவேராகக்‌ கொண்டு,… ஆசையாலோ அச்சத்தாலோ வளர்க்கப்படாமல்‌, சத்தியத்தை உணர்த்துவதனாலேயே வளர்ந்த தர்மம்‌ இது.

நமது இந்தியாவில்‌ மட்டும்தான்‌ இருக்கிறது. நமது தர்மத்தில்‌ கடவுளேகூட சத்தியத்தை அடைவதற்கான ஒருபடிதான்‌. கடவுள்‌ என்கின்ற கருத்து எதற்காக என்றால்‌, ஞானமடைவதற்காக உபயோகமாகும்‌ ஒரு படியாகத்தான்‌ இருக்கிறது. கடவுள்கூட சத்தியத்தை அடைகின்ற பாதையில்‌ இருக்கின்ற ஒருபடிதான்‌. கடவுளை நாம்‌ இறுதியாக வைக்கவில்லை. சத்தியத்தை உணர்வதைத்தான்‌ இறுதியாக வைத்தோம்‌. அதற்கு ஒரு வழிதான்‌ கடவுள்‌. வாழ்வின்‌ இலட்சியத்தை மீண்டும்‌, மீண்டும்‌ நினைவுறுத்திக்‌ கொண்டே இருக்கும்‌ தர்மம்தான்‌, இந்தியாவின்‌ பலம்‌ ஏன்‌ இத்தனை மதங்கள்‌?

22. நம்முடைய கலாச்சாரத்தில்‌ ஏன்‌ இத்தனை மதங்கள்‌? – தேவதூத்‌, சண்டிகார்‌

ஏனென்றால்‌, நமது வேத பாரம்பரியம்‌ அவ்வளவு வெளிப்படையானது. வேத பாரம்பரியத்தைப்போல்‌ திறந்த தன்மை (௦060888) வேறு எந்த மதத்திற்கும்‌ கிடையாது. நேற்று வரைக்கும்‌ புத்தம்‌ சரணம்‌ கச்சாமி,” என்று சொல்லிக்கொண்டு இருந்து, ஒருவேளை இன்றைக்கு வேறு யாராவது ஒருவர்‌, நமக்கு “அதைவிட ஆழமான சத்தியத்தை உணர்த்துவேன்‌” என்று சொன்னால்‌, உடனடியாக அதைக்‌ கடைப்பிடிப்பதற்கான சுதந்திரம்‌ நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது…

சுதந்திரம்‌ மட்டுமல்ல, அது நமக்குக்‌ குறிக்கோளாகவே உரைக்கப்பட்டும்‌ இருக்கிறது.
கோட்பாடுகள்‌ இல்லாத மதம்‌, நமது கலாச்சாரம்‌. தேடுதல்‌ ஒன்றையே ஆணிவேராகவும்‌, அடித்தளமாகவும்‌ கொண்டது நம்‌ சனாதன தர்மம்‌. யாராவது ஒருவர்‌, நாம்‌ பின்பற்றிக்‌ கொண்டிருக்கும்‌ மதத்தை விட, ஆழமான சத்தியத்தை உணர்த்துவேன்‌ என்று சொன்னால்‌, உடனடியாக முழுமையாக அவரைக்‌ கடைபிடிப்பதற்கான சுதந்திரம்‌ நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஆழமான ஒரு சத்தியத்தைக்‌ காட்டுவார்களேயானால்‌, அவர்களை முழுமையாக பின்பற்றுவதை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல்‌ உற்சாகப்படுத்துகின்ற உத்வேகப்படுத்துகின்ற தர்மம்‌ நம்‌ தர்மம்‌. அதனால்தான்‌, நமது தர்மம்‌ மனித மனத்தின்‌ மிக உயர்ந்த முதிர்ச்சியையும்‌. மிக உயர்ந்த பொறுப்புத்‌ தன்மையையும்‌, மிக உயர்ந்த இனிமைத்‌ தன்மையையும்‌ வெளிப்படுத்துகின்ற தர்மமாக இருக்கிறது.

நேற்று வரைக்கும்‌ புத்தமதத்தில்‌ இருந்து, இன்றைக்கு வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒரு ஞானி, உங்களுக்குச்‌ சத்தியத்தை, அதைவிட ஆழமாகக்‌ காட்டுவாரென்றால்‌, வேத பாரம்பரியத்தைத்‌ தழுவுவதை புத்தமதம்‌ எதிர்க்கவில்லை. அதேமாதிரி, இன்றுவரை வேத பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவராக இருந்து, நாளை புத்தமதத்தை சேர்ந்த ஒரு ஞானி உங்களுக்கு ஞானத்தின்‌ உச்சியை, உங்களுக்குத்‌ தெரிந்ததைவிட, ஆழமாக ஒரு உச்சிக்கு அவரால்‌ எடுத்துச்‌ செல்ல முடியுமானால்‌, நீங்கள்‌ அவரை முழுமையாகக்‌ கடைப்பிடிப்பதை வேத பாரம்பரியம்‌ ஒருகாலும்‌ மறுக்கவில்லை.மனிதனுக்குத்‌ தேவையான முக்கியமான இந்தச்‌ சுதந்திரத்தை அறிவதற்காகத்தான்‌ இத்தனை மதங்கள்‌ இந்தத்‌ தர்மத்தில்‌ இருக்கிறது. புத்தகப்‌ பைத்தியமாக இருப்பது தவறா?

23. நான்‌ ஒரு புத்தகப்‌ பைத்தியம்‌. படித்துப்‌ படித்து இப்போது எதைப்பார்த்தாலும்‌ அதைப்பற்றி நான்கு விஷயங்கள்‌ தெரிகிறது. அதனாலேயே எதையும்‌ அனுபவிக்க முடியவில்லை. என்னைவிட கம்மியாகப்‌ படித்தவர்களெல்லாம்‌ எல்லாவற்றையும்‌ அனுபவிக்கிறார்கள்‌. எனக்கு வர வர யைத்தியமே பிடித்துவிடும்‌ போலிருக்கிறது ?” -பெனிட்டா, அஸ்ஸாம்‌.

அளவிற்கு மீறி தெரிந்து வைத்துக்கொண்டு, அது அனுபூதியாக மாறாதபோது, அவை நமக்குச்‌ சுமையாகவே மாறிவிடுகிறது. காலையில்‌ எழுந்ததும்‌, நாம்‌ எல்லோரும்‌ சாப்பிடுகிறோம்‌. அந்தச்‌ சாப்பிட்ட உணவு செரித்துவிட்டால்‌, நம்‌ உடம்பிற்கும்‌ நல்லது, உடம்பிற்குச்‌ சக்தி கிடைக்கும்‌. நம்‌ வயிற்றுக்கும்‌ நல்லது. வயிறு சுலபமாக, இனிமையாக, காலியாக இருக்கும்‌. அந்த உணவானது செரிக்கவில்லை என்றால்‌ என்னவாகும்‌? நம்‌ வயிற்றுக்கும்‌ நல்லது அல்ல. வயிற்றில்‌ அஜீரணக்‌ கோளாறு ஏற்படும்‌. அது மட்டுமின்றி நம்‌ அருகில்‌ யாராவது இருந்தால்‌, அவர்கள்‌ மேல்‌ வாந்தி எடுப்போம்‌ அந்தச்‌ செயல்‌ நமக்கும்‌ நல்லது அல்ல, நம்மைச்‌ சுற்றி இருப்பவர்களுக்கும்‌ நல்லது
அல்ல. நீங்கள்‌ படிக்கும்‌ கருத்துகள்‌ உங்கள்‌ வாழ்க்கைக்கு உயிர்‌ கொடுக்கும்‌

சக்தியாக மாற வேண்டும்‌. ஆனால்‌, அந்த வார்த்தைகள்‌ செரிக்கப்படாமல்‌ இருந்தால்‌, செரிக்கப்படாத உணவு வயிற்றில்‌ பாரமாக இருப்பதைப்‌ போல, இக்கருத்துகள்‌ தலையில்‌ பாரமாக இருக்கும்‌.

தலையின்‌ பாரம்‌, தலையில்‌ கனமாக மாறினால்‌ நமக்கும்‌ தலைக்கனம்‌ அதிகமாகும்‌. பிறகு, நம்மைச்‌ சுற்றி இருப்பவர்களுக்கு மேல்‌ இந்தக்‌ கருத்துகளை வாந்தி எடுத்துக்‌ கொண்டே இருப்போம்‌. செரிக்காத உணவுபோல்‌, செரிக்காத கருத்துகளும்‌ பாதகம்‌ தரும்‌. அது தன்னைச்‌ சுற்றி இருப்பவர்களுக்கும்‌ தீங்கு விளைவித்துக்‌ கொண்டே இருக்கும்‌. வாழ்க்கையில்‌ பெரும்‌ பகுதியைப்‌ புத்தகம்‌ படிப்பதில்‌ செலவு செய்திருக்கிறீர்கள்‌. நல்லது!

வார்த்தைகளில்‌ இரண்டு வகை உண்டு. முதலாவது : மனத்திற்கு அஜீரணத்தைத்‌ தரும்‌ வார்த்தைகள்‌. இரண்டாவது : மனத்தையே ஜீரணிக்கும்‌ வார்த்தைகள்‌.

முதல்‌ வகை வார்த்தைகள்‌, சாதாரண உணர்வு நிலையில்‌ இருக்கும்‌ மனிதர்களில்‌ மனத்திலிருந்து வருவது. இது மேலும்‌ மேலும்‌ வார்த்தைகளைச்‌ சேகரித்துச்‌ சேகரித்த மனத்தைச்‌ சிக்கலாக்கும்‌. மனவோட்டத்தை அதிகரிக்கும்‌.

இரண்டாவது வகை வார்த்தைகள்‌, உயர்ந்த உணர்வு நிலையில்‌, மனம்‌ கடந்‌, நிலையில்‌ இருக்கும்‌ ஞானிகளிடமிருந்து வருவது. அதனால்தான்‌ ஞானிகளி வார்த்தைகளை மந்திரங்கள்‌ என்று சொல்வோம்‌.

ஞான வார்த்தைகள்‌, வார்த்தைகளைச்‌ சேகரிக்காது. அந்த வார்த்தைகலை சேகரிக்கும்‌ மனத்தையே காலிசெய்துவிடும்‌. மனத்தையே ஜீரணித்து விடும்‌. எனவே, ஞானியின்‌ வார்த்தைகளையும்‌, அவர்களின்‌ சொற்பொழிவுகளையு। படியுங்கள்‌. பைத்தியம்‌ பிடிக்குமளவிற்கு இருக்கும்‌ மனத்தையே இது ஜீரணித்துவிடும்‌ கடவுள்‌ எப்படி இருப்பார்‌?

24. கடவுள்‌ இருக்கிறாரா, இல்லையா? இருந்தால்‌ அந்தக்‌ கடவுள்‌ எப்படியிருப்பார்‌? மனிதனைப்போல்‌ இருப்பாரா? – புபேஷ்‌,கான்பூர்‌.

விவேகானந்தரிடம்‌ ஒரு அன்பர்‌ கேள்வி கேட்டார்‌, ““சாமி! ராமகிருஷ்ணரை நீங்கள்‌ ஒரு ஞானி என்று சொன்னால்‌ என்னால்‌ ஏற்றுக்கொள்ள முடியும்‌. அவரைக்‌ கடவுள்‌ என்றும்‌, அவதாரம்‌ என்றும்‌ சொல்கிறீர்களே அது சரியா?” விவேகானந்தர்‌ அந்த அன்பரைப்‌ பார்த்து, “அப்பா? கடவுள்‌ என்றால்‌ உனக்கு என்ன தெரியும்‌ சொல்‌?”

அதற்கு அவர்‌, ““கடவுள்‌ என்பவர்‌ எல்லாம்‌ தெரிந்தவர்‌. அவரால்‌ எல்லாவற்றையும்‌ செய்ய முடியும்‌. எல்லாச்‌ சக்திகளும்‌ வாய்ந்தவர்‌. எல்லா இடத்திலும்‌ இருப்பவர்‌,” என்று சொன்னார்‌. அதற்கு, விவேகானந்தர்‌ கேட்கிறார்‌. “எல்லா இடத்திலும்‌ இருக்கிறார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌?”
அந்த அன்பர்‌, “கடவுள்‌ தூணிலும்‌ இருப்பார்‌, துரும்பிலும்‌ இருப்பார்‌,” என்று சொன்னார்‌.

“தூணிலும்‌ இருப்பார்‌, துரும்பிலும்‌ இருப்பார்‌ என்றால்‌ என்ன அர்த்தம்‌? எப்படி இருப்பார்‌?” என்று கேட்டார்‌. அந்த அன்பருக்குப்‌ புரியவில்லை. “நீங்கள்‌ என்ன கேட்கிறீர்கள்‌ என்று புரியவில்லையே சாமி?” என்றார்‌. அடுத்து, விவேகானந்தர்‌, “எல்லாம்‌ தெரிந்தவர்‌, எல்லாவற்றையும்‌ செய்யக்கூடியவர்‌, எல்லாச்‌ சக்தியும்‌ நிறைந்தவர்‌ என்று கடவுளைப்‌ பற்றி நீங்கள்‌ சொன்னீர்கள்‌ அல்லவா! அப்படி என்றால்‌ நீங்கள்‌ எந்த அளவு புரிந்துகொண்டீர்கள்‌ என்று தெளிவாகச்‌ சொல்லுங்கள்‌” என்று கேட்டார்‌.

அதற்கு அந்த அன்பர்‌ “உண்மையிலேயே எனக்குத்‌ தெரியவில்லை சாமி! ஏதோ எங்கேயோ புத்தகங்களில்‌ இரண்டு மூன்று வார்த்தைகள்‌ படித்து இருக்கிறேன்‌. அதுதான்‌ ஞாபகம்‌ இருக்கிறது,” என்று சொன்னார்‌. விவேகானந்தர்‌ ரொம்ப அழகாகச்‌ சொல்கிறார்‌, “கடவுள்‌ என்கிற வார்த்தைக்கு உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய விளக்கம்‌ தெரியாது. கடவுள்‌ என்றால்‌ நாம்‌ என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அதைவிடவும்‌ ராமகிருஷ்ணர்‌ உயர்ந்தவர்‌.

கடவுள்‌ என்கிற வார்த்தைக்கு உங்களுக்கு என்ன பொருள்‌ தெரியுமோ, அதைவிடவும்‌ ராமகிருஷ்ணர்‌ உயர்ந்தவர்‌,” என்று விவேகானந்தர்‌ சொல்கிறார்‌. கடவுளை விட உயர்ந்தவர்‌ என்றால்‌, கடவுள்‌ என்கிற வார்த்தைக்கு நாம்‌ என்ன கற்பனை செய்து வைத்திருக்கிறோமோ, அந்தக்‌ கற்பனைகளுக்கெல்லாம்‌ அப்பாற்பட்டவர்‌ ராமகிருஷ்ணர்‌. அதைத்தான்‌ விவேகானந்தர்‌ சொல்கிறார்‌. பொதுவாக, நமக்கும்‌ கடவுள்‌ என்கின்ற வார்த்தைக்கும்‌ மிகப்பெரிய விளக்கம்‌ தெரிவது இல்லை. யார்‌ கடவுள்‌? அவர்‌ எங்கிருக்கிறார்‌?

25. எந்தச்‌ சத்சங்கத்திலும்‌ தொடர்ந்து கேட்கப்படும்‌ கேள்வி, “கடவுள்‌ இருக்கிறாரா, இல்லையா?

“இல்லை” என்று சொல்பவர்களும்‌ முட்டாள்கள்‌. “இருக்கிறார்‌” என்று சொல்லி வாதம்‌ செய்பவர்களும்‌ முட்டாள்கள்‌. கடவுள்‌ இருக்கிறாரா, இல்லையா என்பது வாதத்தின்‌ மூலம்‌ தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பொருள்‌ அல்ல. கடந்து உள்ளிருந்து அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு உணர்வு கடவுள்‌ இருக்கிறாரா, இல்லையா என்பது வாத, பிரதிவாதங்களின்‌ மூலமாகத்‌ தெரிந்துக்‌ கொள்ளப்படவேண்டிய ஒரு பொருள்‌ அல்ல!

கடந்து, உள்ளிருந்து… உணரப்பட வேண்டிய ஒரு உணர்வு. “கடவுள்‌ என்கிற வார்த்தைக்கு நமக்கு என்ன தெரியுமோ, அதைவிடவும்‌ தாண்டிய நிலையில்‌ இருப்பவர்‌ ராமகிருஷ்ணர்‌,” என்று விவேகானந்தர்‌ சொல்கிறார்‌.

அதனால்தான்‌, அவரைக்‌ கடவுள்‌ என்கின்ற வார்த்தையையும்‌ தாண்டிய அவதாரப்புருஷர்‌ என்று அழைக்கிறேன்‌ என்கிறார்‌. யாரும்‌ புரிந்து கொள்வதில்லை ஏன்‌…

26. என்னை ஏன்‌ யாருமே புரிந்து கொள்ளமாட்டேன்‌ என்கிறார்கள்‌? – மூருகேசன்‌,கடப்பா

உங்களை மற்ற எல்லோரும்‌ புரிந்துகொள்வது என்பது, இந்த ஜென்மத்தில்‌ அல்ல. எந்த ஜென்மத்திலும்‌ நடக்காத காரியம்‌. முதலில்‌ உங்களை நீங்கள்‌ புரிந்துகொண்டீர்களா? அதுவே அரைகுறையாக இருக்கும்பொழுது, “மற்றவரெல்லாம்‌ என்னைப்‌ புரிந்துகொள்ள வேண்டும்‌,” என்று வற்புறுத்துவதும்‌, எதிர்பார்ப்பதும்‌ வறட்டுப்‌ பிடிவாதம்‌.

புரிந்துகொள்வார்கள்‌ என நினைக்காதீர்கள்‌. “புரிந்து கொண்டேன்‌.புரிந்து கொள்வேன்‌,” என வாழ ஆரம்பியுங்கள்‌. இதனால்‌ பிரச்சினை தீர்ந்தது. பிரகாசம்‌ வந்தது, உங்கள்‌ வாழ்வில்‌!
காம உணர்ச்சிகள்‌ வாட்டுகிறது…

27. காம உணர்ச்சிகள்‌ என்னை வாட்டுகிறது. அவற்றை அடக்க நினைக்கிறேன்‌ முடியவில்லை வழி சொல்லுங்கள்‌. – இராகுல்‌, காஞ்சி.

காமத்தை அடக்க முயற்சிக்காதீர்கள்‌ கடக்க முயற்சியுங்கள்‌. முதலில்‌ எந்தவொரு உணர்ச்சியையும்‌ அடக்குவது பாம்பை சும்மா அடிப்பதற்குச்‌ சமம்‌. அடிபட்டதும்‌ அடியில்‌ படுத்திருக்கும்‌ பாம்பு, ஆறடி கூட எழும்பும்‌, ஆச்சரியப்படுவதிற்கில்லை. கோபத்தைக்‌ கூட அடக்கக்‌ கூடாது. கடக்க வேண்டும்‌. யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே…

28. நான்‌ நல்லவன்‌ என்பதை ஏன்‌ யாருமே புரிந்துகொள்ள மாட்டங்கறாங்க? எல்லாம்‌ கலி முத்திப்போச்ச… மட மனிதர்கள்‌மாறுவார்களா ? – ஜேம்ஸ்‌, திருச்சி

இது கலிகாலங்க. நீங்கள்‌ நல்லவராக வாழ்வது மட்டுமே போதாது. நீங்கள்‌ நல்லவர்‌ என்பதை மற்றவர்களும்‌ புரிந்துகொள்ளும்படி நீங்கள்‌ வாழ்ந்து காட்ட வேண்டும்‌. நீங்கள்‌ நல்லவர்‌ என்ற உண்மை உங்களுக்குத்‌ தெரிந்திருப்பதே மாபெரும்‌ முன்னேற்றம்தான்‌.

நல்லவன்‌ நான்‌ என சொல்வதும்‌ நல்லவன்போல்‌ நடிப்பதும்‌ – உங்களைக்‌
கெட்டவனாக்கிக்‌ காண்பிக்கும்‌ நல்லவன்‌ நான்‌ என சொல்லாதீர்‌! காண்பிக்காதீர்‌!
“நல்லவனாகவே மாறிவிடுங்கள்‌. அதை உங்கள்‌ செயல்‌ முகபாவங்களில்‌ முழுமையாய்‌ வெளிப்படுத்துங்கள்‌. மற்றவரைக்‌ குறை சொல்வதால்‌ உங்கள்‌ குறை நீங்காது. மற்றவர்‌ யாராயிருந்தாலும்‌ அவரை மகான்போல்‌ மதிக்கும்‌ சத்ய யுகம்‌ அல்ல இது. இது கலிகாலம்‌.
நல்லவனாயிருப்பதோடு – புரியும்‌ வகையில்‌ நல்லவனாய்‌ வாழ்ந்து காட்டவேண்டும்‌.* இது கலியுக நெறி. நரகம்‌ செல்‌வேனா?

29. தவறு செய்தால்‌ நரகம்‌ செல்வேனா? – மணிமேகலை, மதுரை

தவறு செய்வதால்‌ நரகம்‌ செல்ல மாட்டீர்கள்‌. நரகத்தில்‌ வாழ்வதால்தான்‌ தவறுகள்‌ பல செய்வீர்கள்‌. நொடிக்கு நொடி உங்களைத்‌ துடிக்க வைக்கும்‌ மன வேதனைகளே நரகம்‌
நரகம்‌ புவியியல்‌ ரீதியானது அல்ல; மனவியல்‌ ரீதியானது. எனவே, நரகம்‌ பற்றித்‌ துளிகூட பயம்‌ வேண்டாம்‌. நரக உணர்வுகளிலிருந்து வெளிவந்தாலே தவறு செய்ய மாட்டீர்கள்‌. உயர்ந்த உணர்வுகளில்‌ வாழ ஆரம்பியுங்கள்‌. சொர்க்கத்திலேயே வாழ்வீர்கள்‌.