LOADING

Type to search

பொது

ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் !

Share

ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849 ஆம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவர் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். அவருக்கு அதிக அலவில் கடன் இருந்தது. கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த அவர், கடனை அடைக்க அவர் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளில் சேப்டி பின்னும் ஒன்று. சேப்டி பின் கண்டிபிடிக்கப்பட்ட பிறகு, இந்த பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை வால்டர் உணர்ந்தார். அதன் பிறகு காப்புரிமை பெற்று விற்றார். அந்த நேரத்தில், இந்த கண்டு பிடிப்பிற்காக அவருக்கு $ 400 கிடைத்தது

இதுமட்டுமின்றி பேனா, கத்தியை கூர்மைப்படுத்தும் கருவிகள், ஸ்பின்னர்கள் போன்றவற்றையும் வால்டர் ஹன்ட் கண்டு பிடித்தார். அவர் ஒரு தையல் இயந்திரம் கூட கண்டுபிடித்தார்.

ஒருமுறை வால்டரின் மனைவி ஏதோ வேலையாக வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது உடையில் இருந்த பட்டன் உடைந்தது. அந்நிலையில், வால்டர் ஒரு பொத்தானாகச் செயல்படும் வகையில் சிறு கம்பியைக் கொண்டு தயாரித்து அவருக்கு உதவினார். இது தான் சேப்டி பின் கண்டி பிடிக்கப்பட்டது தொடர்பான கதை. அப்போது அதற்கு டிரெஸ் பின் என்று பெயர் சூட்டப்பட்டது.

மாறிவரும் காலத்திலும் அதன் பயன் குறையவில்லை. இதை தயாரிக்கும் நிறுவனங்கள், அதன் டிசைனில் குளறுபடி இல்லாமல், பெண்களின் புடவையின் நிறத்திற்கேற்ப பின்னை கலர்ஃபுல்லாக செய்தன.

ஹன்ட்டின் இந்த கண்டுபிடிப்பபான சேப்டி பின் மூலம் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, கம்பியால் விரல்களில் ஏற்பட்ட காயமும் தவிக்கப்படுவதால், இதற்கு சேஃப்டி பின் என்று பெயர் வந்தது. பெண்கள் புடவை முதல் சல்வார் கமீஸ் வரை அனைத்திற்கும் சேப்டி பின்னை பயன்படுத்துகின்றனர். காயம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகவே இது சேப்டி பின் என்று அழைக்கப்படுகிறது.