LOADING

Type to search

கனடா அரசியல்

ஓட்டாவாவில் இடம் பெற்ற லிபரல் ஒன்று கூடலில் கன்சர்வேடிவ் தலைமை வேட்பாளரான பியர் பொய்லிவ்ரேயை கடுமையாக விமர்சித்த துணைப் பிரதமர் கிறிஸ்டினா

Share

கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டாவாவில் இடம்பெற்ற லிபரல் கட்சியின் ஒன்றுகூடலில் பிரதான உரையாற்றிய கனடாவின் தற்போதைய நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மத்திய கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான பியர் பொய்லிவ்ரேயை கடுமையாகத் தாக்கிப் பேசினார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பான எந்தவித அறிவும் இல்லாத அவர் தற்போதைய கனடாவின் மத்திய வங்கியின் ஆளுனரை தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பெற்றால் பதவியிலிருந்து அகற்றுவேன்’ என்று சில நாட்களுக்கு முன்னர் பேசியது தொடர்பாகவே துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், இவ்வாறு அவரை கடுமையாக கண்டித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்ற இந்த லிபரல் ஒன்றுகூடலுக்கு பிரதான உரையாற்றவிருந்த பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் மீண்டும் ‘கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் மேற்படி ஒன்று கூடலில் கனடாவின் துணைப் பிரதமர் அவருக்குப் பதிலாக உரையாற்றினார்..

மேற்படி ஒன்று கூடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சில தமிழ் பேசும் அன்பர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கு உரையாற்றிய துணைப்பிரதமர் கிறிஸ்ரியா பிரிலாண்ட் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி வேட்பாளரான பியர் பொய்லிவ்ரே – மத்திய வங்கி மீதான தாக்குதல்களுக்காகவும், அவர் பிரதமரானால் அதன் ஆளுநரான டிப்
மாக்லெம் அவர்களை பதவி நீக்கம் செய்வதாகவும் கூறியுள்ளதை அவர் கடுமையாக
விமர்சித்தார்

“பணவீக்கத்தை இலக்கிற்குள் கொண்டு வருவதற்கான பணியை மத்திய வங்கி தொடங்கியுள்ளது, மேலும் பணவீக்கம் நிலைபெறாமல் இருக்க தேவையான கருவிகள் மற்றும் நிபுணத்துவம் எமது மத்திய வங்கியிடம் உள்ளது” என்று அவர் கூறினார். மேலும் தனிநபர் வருமான ஆதரவை வழங்குவதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பிற நடவடிக்கைகளை அவர் அடிக்கோடிட்டுக் காட்டவும் தவறவில்லை.

மேலும் திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஒன்றுகூடலில் உரையாற்றியபோது, கொன்சர்வேர்ட்டிவ் தலைமை வேட்பாளரை நேரடியாக பெயரிடாமல், கிறிஸ்ரியா பிரிலாண்ட் அவர்கள் வங்கி மற்றும் அதன் கவர்னர் மீதான தனது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது கீச்சகப்பதிவில் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னணி வேட்பாளரான பியர் பொய்லிவ்ரே பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, “நிதியியல் துறையில் கல்வியறிவற்றவர்” அவர் என்று துணிச்சலாகத் தெரிவித்தார்.

“உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஏற்ற இறக்கத்தின் தாக்கம் நிறைந்த இந்த நேரத்தில், கனடாவின் அடிப்படை நிறுவனங்களை குறைத்து மதிப்பிடுவது மற்றும் விமர்சனங்களுக்கு உட்படுத்துவது – கனடாவின் வங்கி உட்பட துறைகளில் மிகவும் பொறுப்பற்ற வகையில் அவர் விமர்சனம் செய்து வருகின்றார்” என்றும் கிறிஸ்ரியா பிரலாண்ட் மேலும் தெரிவித்தார்.

இங்கே காணப்படும் படங்களில் அங்கு கலந்து கொண்ட கனடா உதயன் குழுமத்தினர்
மற்றும் ‘ரூபம்’ தொலைகாட்சி குழுவினரையையும் அவர்களோடு கனடாவின்
அமைச்சர்களான Honourable Bill Blair மற்றும் e Honourable Helena Jaczek  மற்றும்  முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான Peter Milliken அவர்கள் ஆகியோரோடு எடுத்துக்கொண்ட படங்களையும் காணலாம்.

(படங்கள்:- கெவின்.)