LOADING

Type to search

கனடா அரசியல்

மொன்றியாலில் கர்நாடக சங்கீதத்தை இளைய தலைமுறையினருக்கு கற்றுத் தருவதில் முன்மாதிரியாகத் திகழ்வது செல்வமலர் மதுரநாயகம் அவர்களின் மதுரகான மன்றம் இசைக் கல்லூரியாகும்

Share

இசைச் செல்விகள் உமையாழினி அபிஷனா ஆகியோரின் இசை அரங்கேற்றத்தில் உதயன் லோகேந்திரலிங்கம் புகழாரம்

“இன்றைய இசையரங்கேற்றத்தின் நாயகிகள் உமையாழினி மற்றும் அபிஷனா ஆகியோரை அரங்கேற்றம் வரையும் அழைத்து வந்து மேடையில் அமர வைத்துள்ள அவர்களது குரு செல்வி நயனி மதுரநாயகம் அவர்களின் கன்னி அரங்கேற்றம் பல சிறப்புக்களை கொண்டதாக விளங்குகின்றது.

குறிப்பாக மொன்றியால் நகரில் கர்நாடக சங்கீ;தத்தை எமது இளைய தலைமுறையினருக்கு கற்றுத் தருவதில் முன்மாதிரியாகத் திகழ்வது ஶ்ரீமதி செல்வமலர் மதுரநாயகம் அவர்களின் மதுரகான மன்றம் இசைக் கல்லூரியாகும் இதனை நான் உணர்கின்றேன். தான் நிறுவிய இந்த மதுரகான மன்றத்தின் சிரேஸ்ட மாணவிகள் இருவரையும் தனது புதல்வியிடம் ஒப்படைத்து அவர்களை புகழின் உச்சத்திற்கு கொண்டு வந்துள்ள ஶ்ரீமதி செல்வமலர் மதுரநாயகம் அவர்களையும் அவரது புதல்வியும் இசையாசிரியையுமான நயனி அவர்களையும் மொன்றியால் வாழ் மக்கள் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டும்”

இவ்வாறு மேற்பஅ இசையரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என் லோகேந்திரலிங்கம் புகழாரம் சூட்டினார்.
மொன்றியால் மதுரகான மன்றம் இசைக் கல்லூரி ஸ்தாபகர் ஶ்ரீமதி செல்வமலர் மதுரநாயகம் அவர்களின் புதல்வியும் சிரேஸ்ட மாணவியுமான செல்வி நயனி மதுரநாயகம் அவர்களின் மாணவிகளான இசைச் செல்விகள் உமையாழினி உதயகுமார்.. அபிஷனா கஜரூபன் ஆகியோரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 08-10-2022 சனிக்கிழமை மொன்றியால் நகரில் College Ahuntsic–9155 Rue Street. Hubert, Montreal கல்லூரி மண்டபத்தில் மாலை 5.30 மணி தொடக்கம் நடைபெற்றது இசைச் செல்விகள் உமையாழினி உதயகுமார்.. அபிஷனா கஜரூபன் ஆகியோரின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக மொன்றியால் வாழ் நடன மற்றும் வீணைக் கலைஞர் சேஷா கமல் ஐயங்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். சிறப்பு விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அழைக்கப்பெற்றிருந்தார்.

அரங்கேற்றச் செல்விகளுக்கு பக்கவாத்தியக் கலைஞர்களாக வயலின் வாத்தியக் கலைஞர் டாக்டர் அஞ்சனா சிறினிவாசன். மிருதங்கக் கலைஞர் ரொறன்ரோ ரதிரூபுன் பரம்சோதி. கடம் கலைஞராக ரொறன்ரோ ரமணா இந்திரகுமார் மற்றும் தம்புரா கலைஞராக செல்வி எவ்லீன் ராஜதுரை ஆகியோர் தங்கள் பங்களிப்புக்களை நேர்த்தியாக அளித்தனர்.

அங்கு உரையாற்றிய பிரதம விருநதினர் மொன்றியால் வாழ் நடன மற்றும் வீணைக் கலைஞர் சேஷா கமல் ஐயங்கர் அவர்கள் தனது உரையின் போது மொன்றியால் மதுரகான மன்றம் இசைக் கல்லூரி ஸ்தாபகர் ஶ்ரீமதி செல்வமலர் மதுரநாயகம் அவர்களையும் அவரது புதல்வியும் சிரேஸ்ட மாணவியுமான செல்வி நயனி மதுரநாயகம் அவர்களையும் அரங்கேற்றம் கண்ட மாணவிகளான இசைச் செல்விகள் உமையாழினி உதயகுமார்.. அபிஷனா கஜரூபன் ஆகியோரையும் பக்கவாத்தியக் கலைஞர்களையும் திறம்படப் பாராட்டி மகிழ்ந்தார்.

அவர் ஓரு நடனக் கலைஞராகவும் வீணை வாத்தியக் கலைஞராகவும் விளங்குவதால் கர்நாடக சங்கீதத்திின் பல நுட்பங்களை எடுத்துரைத்து அவ்வாறான அம்சங்களை அரங்கேற்றச் செல்விகளின் குரு எவ்வாறு தனது மாணவிகளுக்காக அர்ப்பணித்துள்ளார் என்பதையும் விளக்கினார். அத்துடன் அரங்கேற்றச் செல்விகளுக்கும் தனது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.