LOADING

Type to search

கனடா அரசியல்

”உதயன் சர்வதேச விருது விழா-2022 ‘ல் வாழ் நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற இருவருக்கு மொன்றியால் மாநகரில் அளிக்கப்பெற்ற வரவேற்புபசாரம்

Share

கடந்த 15ம் திகதி சனிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற ”உதயன் சர்வதேச விருது விழா-2022 ‘ல் வாழ் நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற இருவருக்கு மொன்றியால் மாநகரில் அளிக்கப்பெற்ற வரவேற்புபசாரம் மற்றும் நூல் வெளியீட்டு வைபவம் ஆகியன சிறப்பாக நடைபெற்றன.

மொன்றியால் திருமுருகன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஆர்வத்துடன் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாட்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் மற்றும் இலங்கைக்கான வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் திரு நிரோஸ் தியாகராஜா ஆகியோருக்கே இந்த வரவேற்புபசாரம் வைபவம் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.

மொன்றியால் வாழ் அன்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த வைபவத்திற்கான ஏற்பாடுகளை திருவாளர் வாகீசன். உதயகுமார். வீணைமைந்தன் சண்முகராஜா. சிவஶ்ரீ ஶ்ரீ ஐயா ஏம்எம்ஆர். ராஜ்கோபால் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

சிவாச்சாரியப் பெருமக்கள். ஆதரவாளர்கள். நண்பர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் கலை இலக்கிய நண்பர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாட்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் மற்றும் இலங்கைக்கான வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் திரு நிரோஸ் தியாகராஜா ஆகியோர் நன்றி தெரிவித்தும் பல கருத்துக்கள் கொண்டதாகவும் தங்கள் உரைகளை வழங்கினர்.

கனடா உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கமும் அங்கு உரையாற்றினார். அத்துடன் தமிழ்நாட்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற பேராசிரியர் வேலாயுதம் சங்கரநாராயணன் உதயன் வார இதழில் எழுதிய ‘பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்’ என்னும் நூலின் பிரதிகளும் மொன்றியால் வாழ் அன்பர்களுக்கு வழங்கப்பெற்றன.