LOADING

Type to search

கனடா அரசியல்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தை பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ளன

Share

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிராக ஒரே மனதாக தீர்மானம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

உக்ரைன் மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தையும் அப்பாவிப் பொதுமக்களையும் மக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை விளைவித்து அழகிய ஒரு தேசத்தை அழித்து சின்னாப்பின்னமாக்கியதற்கும் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்களும் தலைவர்களும் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதோடு, ரஸ்யாவின் கடும் போக்கினால் உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட அந்த தீர்மானத்தில், ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கடுமையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் இந்த தீர்மானங்களுக்கு கனடா. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் வெறுப்பை சுட்டிக்காட்டியுள்ளனர் என அறியப்படுகின்றது.

ஜி20 அமைப்பானது பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மன்றம் அல்ல என்பதை அங்கீகரித்துள்ளதுடன், பாதுகாப்புச் சிக்கல்கள் உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜி20 தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் உக்ரைன் போரை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஒன்றிணைந்த கண்டனத்தை தெரிவிப்பதில் தோல்வி கண்டது.

ஆனால் தற்போது இந்தோனிசியாவின் பாலி நகரில் நடைபெற்றுவரும் இந்த ஜி20 மாநாட்டில், ரஷ்யாவின் படையெடுப்பால் உலகளாவிய பணவீக்கம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை விரிவாக விவாதித்துள்ளனர்.

அத்தடன் இது மட்டுமின்றி, காணொளி ஊடாக மநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி அவர்களும். , ரஷ்யா முன்னெடுத்திருக்கும் போரினை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும் ஜி20 மாநாட்டில் கலந்துள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சில மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநாட்டை புறக்கணிக்க இருப்பதாகவும் மிரட்டியிருந்தன..

ஆனால், இந்தோனேசிய அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ரஷ்யாவும் கலந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக நின்றது . இதனையடுத்து ரஷ்ய தரப்பில் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி20 உச்சி மாநாட்டில் தற்பொழுத கலந்துகொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கனடா நிற்கும் எனவும் தற்பொழுது வழங்கிவரும் ஆதரவைஇன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘ரஷ்யாவின் மிருகத்தனமான போர் உக்ரைனில் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை உருவாக்குகிறது. இது விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கிறது மற்றும் வாழ்வுக்கான செலவை உயர்த்துகிறது’ என அங்கு உலக வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது கூறினார்.

அதனைத் தொடர்ந்து கனடிய பிரதமர் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு நாள் இது. அடுத்த இரண்டு நாட்களில், உக்ரைனுக்கு ஆதரவாக கனடா நிற்கும், ஒற்றுமையை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும் மற்றும் கனேடியர்கள் சவால்களையும் எதிர்கொள்ள முடியும். இந்த விடயத்தில் மேலும் பல நன்மைகள் நிறைய வர விருக்கின்றன’ எனவும் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா மீதான கனடாவின் நிலைப்பாடு சில ஜி20 நாடுகளுடன் முரண்படுகிறது. சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் இருந்து சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் விலகியிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் மிகவும் முட்டாள்த் தனமாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருவதாகவும் பிரிட்டினைச் சேர்ந்த தேசியப் பத்திரிகையாளர் ஒருவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இது இவ்வாறிக்க. இந்தோனேசியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை உக்ரைன் காரணமாக கடுமையாகக் தாக்கிப் தனது உரையில் கண்டித்திருந்தார். .

அத்தடன் அவர் “உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கடுமையான தொனியில் ரிஷி சுனக், இந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு முடிவு கட்டுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்தார்..

விளாடிமிர் புடின் நிர்வாகம் ரஷ்யாவை ஒரு புறந்தள்ளப்பட்ட நாடாக மாற்றியுள்ளது என்று தனது உரையை ஆரம்பித்த ரிஷி சுனக், எந்தவொரு நாடும் அண்டை நாடுகளை ஆக்கிரமிப்பதும், பொதுமக்களைக் கொல்வதும் மற்றும் அணுசக்தி யுத்தத்தை அச்சுறுத்துவதும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என வன்மையாக் கண்டித்து சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், உக்ரைன் விவகாரத்தில், பிரித்தானியா தொடர்ந்து தனது ஆதரவளிக்கும் என்பதையும் ரிஷி சுனக் தெளிவுப்படுத்தியுள்ளார். ஆனால், ரிஷி சுனக் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் அங்கு உரையாற்றிய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனில் மேற்கத்திய நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனின் ஏற்க முடியாத நிபந்தனைகளே முதன்மை காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தானியங்கள் மற்றும் எரிசக்தி தொடர்பில் ரஷ்யா முக்கிய முடிவெடுக்க தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவின் வெளிநாட்டு அமைச்சர் தொடர்ந்து பேசுகையில்” மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பேச்சை கேட்டிருந்தால், போர் முடிவுக்கு வந்திருக்கும் எனவும் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைன் நிர்வாகம் தங்களிடம் பேச மறுப்பதாகவும், ஒரு பொதுவான ஒப்பந்தத்திற்கு அவர்கள் வர மறுப்பதாகவும் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், உக்ரைன் ஒருபோதும் அமைதிக்கு ஈடாக அதன் இறையாண்மை, பிரதேசம் அல்லது சுதந்திரத்தை சமரசம் செய்துகொள்ளாது என்றார்.

பேரழிவை ஏற்படுத்தும் இந்த போரை ரஷ்யா உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இது எனவும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.