LOADING

Type to search

மரண அறிவித்தல்

கண்ணீர் அஞ்சலியும், அறிவித்தலும் | திரு.சோமசுந்தரம் விஸ்வலிங்கம்

Share

(முன்னாள் ஆசிரியர் புத்துார் சோமஸ்கந்தக் கல்லுாரி மற்றும் யாழ்ப்பாணம், இந்துக் கல்லுரி)

யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும், நைஜீரியா, கனடா ஸ்காரோ ஆகிய இடங்களில் வசித்துவந்தவருமான திரு. சோமசுந்தரம் விஸ்வலிங்கம் அவர்கள்  25-11-2022வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபரோவில் இறைபதமடைந்தார்.

அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சிவானுஜாவின் அன்புத் தந்தையும், முரளிதரனின் அன்பு மருமகனும், ஓவியா, வீணாவின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Ave. East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Highland Funeral Home Scarborough Chapel ல் புதன்கிழமை 30-11-2022 அன்று மாலை மணி தொடக்கம் 8.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை 01-12-2022 அன்று மதியம் 12:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை கிரியைகள் நடைபெற்று பின்னர், Highland Hills Memorial Garden ல் மாலை 3:00 மணி தொடக்கம் 3:30 வரை தகனம் செய்யப்படும்.

அன்னை ஆதிபராசக்தியின் நீண்டகால தொண்டரும், பக்தரும் விசுவாசமான சக்தியுமான அன்னாரின் ஆன்மா சாந்திபெற அன்னையை பிரார்த்திக்கின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாஸ்டீன் வீதி ஆதிபராசக்தி குருமன்ற சக்திகள், ஸ்காபுறோ (647) 436-9647