LOADING

Type to search

கனடா அரசியல்

TUMS என்னும் வர்த்தக் குறியீட்டைக் கொண்ட மாத்திரைகள் கனடாவில் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன

Share

கனடாவின் மருந்துச் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கனடாவின் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
TUMS என்னும் வர்த்தக் குறியீட்டைக் கொண்ட நெஞ்சு எரிவிற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளே இவ்வாறு கனடாவில் மக்கள் பாவனையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் தகடுகளின் துண்டுகள் என்பன கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவிததலை வெளியிட்டுள்ளது. 13 மாத்திரைகளைக் கொண்ட பெட்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மாத்திரைகளே இவ்வாறு மருத்துவச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறியப்படுகின்றது.

இந்த மாத்திரைகளை மக்கள் பயன்படுத்தினால் உடல் சமிபாட்டுத் தொகுதியில் கண்ணாடித் துகள்கள் கலக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வகையான மருந்துகள் உற்பத்தி செய்யப்பப்டுவதை சம்பந்தப்பட்டவர்கள் உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட சிலருக்கு இந்த மாத்திரைகள் உட்கொள்வதனால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேலும் அறியப்படுகின்றது.

இந்த மாத்திரைகள் பாவனைக்குதவாமல் வரும் நாள் திகதி 2027ம் ஆண்டு வரையில் காணப்படுவதாகவும், கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் இந்த மாத்திரைகள் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பாவனைக் காலம் வரை இந்த மாத்திரைகளை விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது என்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும். நெஞ்சு எரிவிற்காகவே , அமிலத்தன்மை அகற்றக் கூடியது என்று இந்த மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவப் பகுதி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.