LOADING

Type to search

விளையாட்டு

உலக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியை நோக்கி பரபரப்பாக நகர்ந்து செல்லும் கட்டார் உதைப்பந்தாட்ட அரங்குகள்

Share

கடந்த பல வாரங்களாக கட்டார் தேசத்தில் நடைபெற்றுவரும் உலக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியைநோக்கி கட்டார் உதைப்பந்தாட்ட அரங்குகள் பரபரப்பாக நகர்ந்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டார் 2022 உலகக் கிண்ண உதைப் பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தற்போது இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன.

கட்டார் அல்-ரய்யான் நகரத்தில் எடியூகேசன் அரங்கில் நேற்று 9ம் திகதி வெள்ளிக்கிழமை கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நடைபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில் அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் முதலில் வழங்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் எதையும் பெறவில்லை. அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர ஆட்டம் 1:1 என்ற விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த பரபரப்பான காட்சியை நேரடியாடிகவும் உலகெங்கிலும் இருந்து தொலைக் காட்சிகள் மூலுமாகவும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர் .இந்த போட்டியில் குரோஷியா அணியானது 4:2 விகிதத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன.

ஆட்டமுடிவின் போது முதலாவது ஆட்டத்தைப் போலவே இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை கோல்களை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் பெனால்ட்டி அடிக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.

அப்போது, ஆர்ஜன்டீனா அணி தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. இதேவேளை நெதர்லாந்து அணி 4 வாய்ப்புகளில் 1-ஐ தவறவிட்டது.

இதனடிப்படையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆர்ஜெண்டினா அணி அரை இறுதிக்குள் தற்போது பிரவேசித்தது.

இதனடிப்படையில் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் இரு அணிகளாக குரோஷியா மற்றும் ஆர்ஜெண்டினா தற்போது விளங்குகின்றன.

இதே போன்று அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் வகையில் மேலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இவ்வாறாக உலகெங்கும் உள்ள ரசிகர்கள் இறுதிப்போட்டியில் வெற்றிக் கிண்ணத்தையும் பணப்பரிசையும் தட்டிக் கொள்ளும் அணி எது என்பதை கண்டுகளிக்க தயாராகி வருகின்றார்கள்