LOADING

Type to search

கனடா அரசியல்

Home Life Future Realty Inc Brokerage Inc, hosted its Annual Sales Awards Gala.

Share

சல்வா வெற்றிவேல் தலைமையிலான வீடு விற்பனை முகவர் நிறுனம் ர்Home Life Future Realty Inc Brokerage நிறுவனத்தின் விருது விழா

ஸ்காபுறோவில் வெற்றிகரமாக இயங்கி வரும் செல்வா வெற்றிவேல் அவர்கள் தலைமையிலான வீடு விற்பனை முகவர் நிறுனம் Home Life Future Realty Inc Brokerage தனது வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் விழாவை கடந்த சனிக்கிழமை 17ம் திகதி Brighten Convention Centre விழா மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.

வெற்றிகளை ஈட்டிய வீடு விற்பனை பிரதிநிதிகள் தங்கள் விற்பனை அளவிற்கு ஏற்ப விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றனர்.

இவ்வருடத்திற்குரிய அதியுயர் விற்பனை விருதை திரு அபி அமல் பெற்றுக்கொண்டார் அவரைக் கௌரவித்த போது அவரது கணவரும் மேடைக்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பெற்றார்.
இவ்வருடத்திற்குரி அடுத்த நிலை சிறப்பு விருதுகளை திருவாளர்கள் செல்வா சண்முகநாதன். ஜோய் செல்வநாயகம். கிறிஸ் சிவபாதம் கைலன் தில்லநாதன் உட்பட பல பெற்றுக்கொண்டனர். அவர்களுக்குரிய விருதுகள் மேடையில் செல்வா வெற்றிவேல் அவர்களால் வழங்கப்பெற்றன.
அத்துடன் இவ்வருடன் இரண்டு மனித நேய உதவிகள் வழங்கப்பெற்றன. ஸ்ரோவில் வைத்தியசாலைக்கு 17000 டாலர்களுக்கு சற்று அதிக தொகைக்கு நிதி அன்பளிப்பு வழங்கப்பெற்றது. இந்த நிதி சேகரிப்பில் திருவாளர்கள் செல்வா சண்முகநாதன். ஜோய் செல்வநாயகம். கைலன் தில்லநாதன் முக்கிய பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாயகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் உலர் உணவு வழங்கும் திட்டத்திற்காகவும் பத்தாயிரம் டாலர்கள் சேகரித்து வழங்கப்பெற்றன.