LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு

Share

19-01-2023
சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுடைய 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

கடந்த 2006 ம் ஆண்டு ஜனவரி 24 ம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்

அதேவேளை கடந்த 2009 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்க அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 8 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது

இதேவேளை 2010 ம் ஆண்டு இன்றைய நாளில் கொழும்பில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட அவர்கள் கடத்தப்பட்டு 13 ஆண்டுகள் கடந்து வரும் இன்றைய நாளில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுடைய 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது

இதேவேளை முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு நகரங்களில் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரியும் அனுஸ்ரிக்கப்படும் கறுப்பு ஜனவரியை நினைவுபடுத்தி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்