ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
Share
19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, இந்தியா வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்தியாவின் பார்ஷவி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, எளிதான இலக்கை துரத்திய இந்திய அணியின், தொடக்க வீராங்கனை சுவேதா 61 ரன்கள் விளாசி அசத்தினார்.
இவரின் அதிரடியால் 14 புள்ளி 2 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்த இந்தியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், முதல் தொடரிலேயே இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.