‘சிவானந்த குருகுலம்’ எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும், திருமறைப் பண்ணிசை கல்லூரியும் அங்குரார்ப்பணம்
Share
(மன்னார் நிருபர்)
(5-02-2023)
.திருக்கயிலாயப் பரம்பரை தருமை யாதீனமும் திருக்கேதீச்சர ஆலய திருப்பணி சபையும் இணைந்து ஆரம்பித்துள்ள ‘சிவானந்த குருகுலம்’ எனும் பேரிலான சிவாகம வேத பாடசாலையும்,திருமறைப் பண்ணிசைக் கல்லூரியும் 05-02-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை(5) ஆம் திகதி தைப்பூச நாளில் காலை 10 மணி அளவில் மேற்படி சிவானந்த குருகுலம் ஆலய வளாகத்தில் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆலய திருப்பணி சபையின் தலைவர் சிவத்திரு ராகவன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தருமை ஆதீன 27 வது குரு மகா சந்நிதானம் சிவ சிறி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதன் போது தருமையாதீன திருக்கேதீஸ்வர கிளை மட கட்டளை தம்பிரான் சிறிமத் மீனாட்சி சுந்தரத் தம்பிரான் சுவாமிகள்,யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா ,பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ஏ.அனுசாந்தன்,உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கு குருகுலத்தில் இணைந்து கற்க விரும்பு வர்களும் இன்றைய தினம் வருகை தந்து குருகுல மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தரவுகளை அறிந்து கொண்டுள்ளனர்.
மேலும் சிவகாமம், வேதம்,திருமுறை பயில விரும்பும் சிவச்சார்ய மரபுடையோரும் சைவ குருமார்களும் திருமுறைப் பண்ணிசை பைல விரும்புவோரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
மேலும் பயிற்சி மாணவர்களுக்கு தங்குமிடமும் உணவு கல்வியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது .