நூறுகோடி மக்களின் எழுச்சி – இலங்கை – 2023
Share
நூறுகோடி மக்களின் எழுச்சியானது உலகலாவிய ரீதியல் 2013 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இது பத்தாவது வருடமாகும்.
“பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் மாசி மாதம் 14ம் திகதி கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதன் மூலம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் பல மாவட்டங்களில் பெண்ணிலைவாத அமைப்புகள், மற்றும் செயற்பாட்டாளர்களாலும், சமூக மாற்றச் செயற்பாட்டாளர்களாலும் இவ் எழுச்சி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
- அன்பினாலோர் உலகம் செய்வோம்!
- பெண்களையும் எந்த மனிதரையும் வன்முறை செய்யாத மகன்களை, சகோதரர்களை,
- நண்பர்களை, துணைவர்களை உருவாக்குவோம்!
- அன்பாலும் நட்பாலும் இணைந்த வாழ்தலை உருவாக்குவோம்!
- பெண்களின் பாரம்பரிய அறிவைக் கொண்டாடுவோம்!
- பூமி மீதான வன்முறைகளை இல்லாதொழிப்போம்!
போன்ற பல்வேறு தொனிப்பொருள்களில் இவ்வருடமும் இலங்கையின் பல பாகங்களில் கொண்டாடப்படவிருக்கின்றது. இந்நிகழ்ச்சி இடம்பெறும் இடங்களையும், இணைப்பாளர்களது தொடர்பு இலக்கங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
தங்களது ஊடகங்களில் இவ்வெழுச்சி தொடர்பான செய்திகளையும் – நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதன் ஊடாக “பெண்களுக்கும் பூமிக்கும் எதிரான வன்முறையற்ற வாழ்தலை” பரவலடையச் செய்யக் கோருகின்றாம்.
அனைவரும் இணைந்து அன்பினாலான சமூகங்களைக் கட்டியெழுப்புவோம்!!!
சமதை பெண்ணிலைவாத நண்பிகள் குழு
மட்டக்களப்பு.
தொடர்பு: நிறோசினிதேவி 0771093731