LOADING

Type to search

மரண அறிவித்தல்

எங்கள் குடும்ப விளக்கின் 16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் | திருமதி. நவரட்ணதேவி உருத்திரசீலன் (மணி)

Share

(நாரந்தனை, கரம்பொன், கொழும்பு) 

யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு, புதுச்செட்டித்தெரு கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணதேவி (மணி) உரத்திரசீலன் (கொழும்பு ஐங்கரன் ஸ்ரோர்ஸ் முன்னாள் பங்காளி) அவர்களின் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 13-02-2023 அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அன்னையின் அஸ்தி சங்கமமாகியதை தொடர்ந்து, 15-02-2023 அன்று யாழ் வீதி இல்லத்தில் கிரியைகள்  நடைபெற்று, நீராவியடி பிள்ளையார்கோவிலும் அன்னதானம் வழிங்கப்பெற்று, கொழும்பு அன்னையில் இல்லத்திலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது.

எங்கள் குடும்பத்தலைவியின் துயரச்செய்தியறிந்து நேரிவும், தொலைபேசிமூலமும் தங்கள் அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், நாடுகளிலிருந்தும் மலர்வளையங்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலிகள் அனுப்பியவர்களுக்கும், அறிவித்தல்கள் உணவு வகைகள் வழங்கியவர்கள், இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றிய உறவினர், நண்பர்கள் அனைத்து உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்புத்தெய்வத்தின் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துன, மைத்துனிகள் பெறாமக்கள் உற்றார், உறவினர். நண்பர்கள்.

அன்னையின் ஆத்மா சாந்திபெற

அன்பு மலர்தூவி இறைவனை வேண்டுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 

உதயன் (மகன்): (416) 857-4809 (416) 551-4128 

சதீஸ் (மகன்): 614 0585 1340 செல்வன் (மகன்): 614 34 217459 

 

அம்பாளைப் போல எம் மத்தியில் வீற்றிருந்து அன்பைப் பகிர்ந்தீர்களே! 

கடல் தாண்டிய தங்கள்பயணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் கால் பதித்தீர்கள்

உற்றார், உறவினர், நண்பர்கள், குழந்தைகள் என அனைவரோடும் அன்பு பாராட்டி நாட்களை கழித்தீர்கள்

விடைபெற்று தாயகம் திரும்பியவரை மீண்டும் விரைவில் சந்திப்போம் என்று தானே வழியனுப்பினோம்

இவ்வளவு விரைவாக உங்கள் விண்ணுலகப் பயணம் இடம்பெறும் என்பதை உணர முடியவில்லையே.

பிறந்த ஊர் நோக்கி பெற்ற பிள்ளைகள் குடும்பத்தினரோடு மீண்டும் பயணித்த வேளையில்

தங்களை குறிவைத்தானோ கொடிய காலனவன்

குல தெய்வத்தை வணங்க குடும்பத்தோடு சென்றிருந்த எம் குலக் கொழுந்தை மண்ணிலிருந்து பிடுங்கி எறிந்தார்களே!

கலங்குகின்றோம் நாமெல்லாம் சேர்ந்து எப்போதும் கலகலவென சிரிப்புச் செல்வத்தை உதிர்த்து மகிழ்ந்து எம்மையும் குதூகலிக்கச் செய்தவரை இழந்ததனால்

துணையை இழந்த துயர் நெடுநாளாய் வாட்டி நிற்க

பாலூட்டி வளர்த்த பிள்ளைகள் பிற நாட்டில் வாழ

உற்றார் உறவினர்கள் உலகெங்கும் பரந்திருக்க தனிமையில் தவித்த துயர் மற்றவர்க்கு தெரியாதிருக்க

எப்போதும் சிரிக்கும் வதனத்துடன் வாழ்ந்த நாட்களை வசந்தங்களாய் ஏற்று நின்றீர்களே!

சிங்காரமாய் சேலை தரிக்கும் அழகு சீரிய பார்வை இவ்வாறாய் அம்பாளைப் போல எம் மத்தியில் வீற்றிருந்து அன்பைப் பகிர்ந்தீர்களே

“மணி” என்று மற்றவர்கள் மதிப்புடன் அழைத்து மகிழ்ந்த

மாசற்ற தாயாய் சித்தியாய் மாமியாய் அப்பம்மாவாய் அம்மம்மாவாய் நண்பியாய் எம் மத்தியில் உலாவிய நீங்கள் இல்லாத பூமி வெறுமையாய்த் தெரிகிறது சென்ற இடத்தில் சிறப்போடும் இம் மண்ணில் உதிர்த்த சிரிப்பலைகளோடும் வாழ்வீர்கள் என்பது உறுதி தாயே!