LOADING

Type to search

விளையாட்டு

நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்த விராட் கோலி

Share

டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடுவரின் தவறான முடிவால் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இதுதொடர்பாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று கோலி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது. 2ஆவது டெஸ்ட் நேற்று தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சை விளையாடியபோது ஓபனர்கள் ரோஹித் 32 ரன்னிலும், ராகுல் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்ட, விராட் கோலி பொறுப்புடன் ஆட்டத்தை எடுத்துச் சென்றார்.

மிக எளிதாக அவர் ரன்களை சேர்த்ததால் இந்தப் போட்டியில் அவர் அதிக ரன்களை குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 50ஆவது ஓவரை குனேமன் வீசினார். 3ஆவது பந்தை கோலி எதிர்கொண்ட போது, ஆஸ்திரேலிய வீரர்கள் அதனை எல்.பி.டபிள்யூ.வுக்கு அப்பீல் செய்து, கோலியை அவுட் ஆக்கினர். 84 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.

Kohli looked angry after being given out by the third umpire.#INDvAUS #ViratKohli𓃵 #Umpire pic.twitter.com/BZPo8G2WL4

— Junnu Ki TECH (@JunnuKi) February 18, 2023
ரிவ்யூவில் இதனை பார்த்தபோது, பந்து பேட்டில் பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விராட் கோலி ஓய்வறையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகியுள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் சேர்த்துள்ளது. 1 ரன் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.