அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக நியமிக்கப்பட்ட அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக்
Share
(மன்னார் நிருபர்)
(19-02-2023)
அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வராக அருட்பணி செபஸ்ரியான் போல் ஜெயந்தன் பச்சேக் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான மகத்தான வரவேற்பு,நன்றித் திருப்பலி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை அவரது பூர்வீக இடமான மன்னார் பேசாலை கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் குருக்கள் இணைந்து நன்றி திருப்பலியை கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து முதல் மாகாண முதல்வராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை எஸ். கிறிஸ்து நாயகம் அடிகளார்,இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் ,இந்தியாவில் இருந்து வருகை தந்த அருட்தந்தை ஐ.சத்யா அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பேசாலை கிராமத்தின் முதல் அமலமரித் தியாகிகள் சபையின் குருவான சட்டன் குரூஸ் அடிகளாரின் நினைவுத் தூபி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார் திறந்து வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.